- போராட்டாமல் நீதி கிடைக்காது , போராடியதால் தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!
- வேளாளர்கள் போராடியதால் தான் ப்ரித்திகா சிறுமி கொலைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி, பாஜக, தமமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் அறிக்கை வெளியிட்டனர்
- நட்பு சாதி என்று இராமநாதபுரத்தில் தேவர் சாதியை சார்ந்த மணிகண்டன் காவல் துறையால் தாக்கப்பட்ட இறந்த போது வேளாளர்கள் போஸ்டர்களும், டூவிட்டரில் மணிகண்டனுக்கு நீதி எங்கே என்ற Trending செய்தோம்! ஆனால் ப்ரித்திகா மரணத்திற்கு நட்பு சாதி என்று நாம் நினைக்கும் எந்த சாதியினரும் நமக்காக வரவில்லை! இதன் மூலம் தெரிவது தனித்து களமாட கற்றுக்கொள்ள கொள்! நட்பு சாதி என்று அவர்களே வந்து நம்மோடு இணைவார்கள்! அதுவரை தனித்தே களமாடு! யாரையும் சார்ந்து இருக்காதே!
- இத்தனை போராட்டம் செய்தும் திண்டுக்கலில் உள்ள இரண்டு அமைச்சர்களும் ப்ரித்திகா குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை! போராட்டத்தின் வீரியம் போதாது
- நேரில் களமாட , போராட்டத்தில் கலந்து கொள்ள வெள்ளாள உறவுகள் சென்றாலும் , வீட்டில் அமர்ந்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளாத வெள்ளாளர்கள் சமூக வலைதளங்களில் ப்ரித்திகா மரணத்திற்கு நீதி கேட்டு பதிவிட்டோர் வெள்ளாளர் எண்ணிக்கை குறைவு! வெள்ளாளர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கற்று கொள்ள வேண்டியது அவசியமாகிறது!
- திண்டுக்கல் மாவட்டத்தில் போராட்டத்தை ஏற்பாடு செய்த இரண்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகமும் Proper ஆக ஊடகங்களுக்கு தகவல் கூறவில்லை எத்தனை முறை நாம் எடுத்து கூறினாலும் வெள்ளாளர்கள் ஊடகத்தை பெரியதாக நாடாமல் இருப்பது வருத்தமளிக்கிறது! ஊடக வெளிச்சம் போதாது வெள்ளாளர்களுக்கு!
- திண்டுக்கல் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் அதிகமாக இருந்தும் ப்ரித்திகா மரணத்திற்கு நீதி கொங்கு வெள்ளாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது வெள்ளாள பிள்ளைமார்களுக்கும், வெள்ளாள கவுண்டர்களுக்கும் இன்னும் பெரிய அளவில் ஒற்றுமை முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை காட்டுகிறது ! வெள்ளாள கவுண்டர்களுக்கும் வெள்ளாள பிள்ளைமார்களுக்கும் இன்னும் அதிக ஒற்றுமை தேவைப்படுவதை இது காட்டுகிறது!
- இருந்த போதும் ப்ரித்தா சிறுமி கொலைக்கு நீதி கேட்டு கொங்கு மக்கள் முன்னணி, E.R ஈஸ்வரன் கட்சியினர், கோபால் ரமேஷ் கவுண்டர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டது மன திருப்பதி! மற்ற கொங்கு அமைப்புகள் மௌனம் காத்தது மிகப்பெரிய ஏமாற்றம்!
- அரசியலில் உள்ள வெள்ளாளர்களுக்கு கவுண்டர், பிள்ளை, முதலி, செட்டி, குருக்கள், நைனார் என்பது பட்டம் தான், நமது சாதி பெயர் வேளாளர் என்பது தெரியாமல் இருப்பது நமக்கு பின்னடைவு! காரணம் திண்டுக்கலில் கொங்கு வெள்ளாள கவுண்டர் திமுக அமைச்சர் சக்கரபாணி இருந்தும் வெள்ளாளர் என்ற முறையில் குழந்தையின் பெற்றோரை சந்திக்காமல் இருந்தது வெள்ளாள அரசியல்வாதிகளுக்கு நமது சாதி எது? பட்டம் எது? என்பதை நாம் மிக அதிகமாக வலுவாக தெரியப்படுத்த வேண்டிய அவசியத்தை இது வெளிகாட்டுகிறது!
- இரண்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தை தவிர மற்ற வெள்ளாளர் அமைப்புகள் போராட்ட களத்தில் இல்லை என்பது வருத்தமும் அந்த அமைப்புகளை இனி வரும் காலத்தில் நாம் துடைத்து எறிவதே நலம் என்பதை நினைவு ஊட்டுகிறது!
- இரண்டு வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில நிர்வாகிகள் வந்து தான் மக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது இரண்டு VMK வும் இன்னும் மாவட்ட, ஒன்றிய, கிளை என அடிமட்ட பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதை இது காட்டுகிறது!
- சமூக வலைதள போராட்ட களத்தில் இரண்டு வெள்ளாளர் முன்னேற்ற கழக IT wing நிர்வாகிகளும் தங்களது பொறுப்பை மறந்து நன்றாக இந்த விஷயத்தில் தூங்கி வழிந்தனர்! IT wing மாநில பொறுப்பாளர்கள் தங்களது கடமையையே மறந்து விட்டனர் என சொல்லலாம்!
- வெள்ளாள முதலியார் அமைப்புகள், நிர்வாகிகள், சங்கங்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவே என்பது வெள்ளாளர்கள் பட்டத்தால் இன்னும் பிரிந்து தான் கிடைக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது ! சாதியால் ஒற்றிணைய வேண்டியதற்கு நாம் இன்னமும் மெனக்கெட்ட வேண்டிய அவசியம் அதிகமாகவே உள்ளது என்பதை காட்டுகிறது!
14 . இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் எந்த மூளைமுடுக்கில் இனி எந்த ஒரு வெள்ளாளருக்கு பிரச்சனை என்றாலும் இனி வெள்ளாளர் அமைப்புகள் முன் வந்து நிற்கும் என்ற தைரியத்தை வெள்ளாள மக்களுக்கு இந்த போராட்டம் காண்பித்துள்ளது
இதோடு நிறுத்தி விடாமல் குற்றவாளி கைது செய்யப்பட்டு அதிகப்பட்ச தண்டனை கிடைக்கும் வரை நாம் இந்த விஷயத்தில் குழுந்தையின் பெற்றோருடன் தொடர்பிலே இருக்கவேண்டியது
அவசியமாகிறது!
வெள்ளாளர் இனத்தின் வரலாற்றை கற்றுகொள்!
அதை மற்ற வெள்ளாளருக்கு கற்று கொடு!
பட்டத்தை துறந்து வெள்ளாளராக ஒன்று சேர்!
அதன் பின் வெள்ளாளர் இனத்தில் புரட்சி தானாக வெடிக்கும்!