சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி !

0
626
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்கள் மறைந்து விட்ட முத்துக்களில், மக்கள் மறந்து விட்ட முத்துக்களில் ஒருவர். நம் வேளாளர் சமூகமான இவர் இந்த இந்தியா நாட்டின் விடுதைக்காக பல இன்னல்களை சந்தித்துஉள்ளர் .இவர் நினைவு அஞ்சலியை முன்னிட்டு ஐயாவின் வாழ்க்கை வரலாற்றின் சிறு குறிப்பை இப்பகுதியில் காண்போம்

சர்தார் வேதரத்தினம் பிள்ளை (Sardar Vedaratnam Pillai) (25 பிப்ரவரி 1897 – 24 ஆகஸ்டு 1961) இந்திய விடுதலை இயக்க வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கொடைவள்ளலும் ஆவார். 14 ஆண்டுகள் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர்.

பிரித்தானிய இந்திய அரசின் உத்தரவை மீறி, இராஜாஜி தலைமையில் 30 ஏப்ரல் 1930 அன்று நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சர்தார் வேதரத்தினம் பிள்ளை பெருமளவில் உதவியதால் ஆறு மாத சிறை தண்டனைக்கு ஆளானவர்.

வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வேதரத்தினம் பிள்ளை ஆற்றிய அளப்பரிய பங்கினைப் பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் (தலைவர்) எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.

1946-இல் வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் காந்தி கன்னிய குருகுலம் எனும் கிராமிய மகளிர் மேம்பாட்டுத் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இத்தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்றோர் இல்லம், கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி வழங்கி வருகிறது.

மகாத்மா காந்தி அறிவித்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர் தியாகி வேதரத்னம் பிள்ளை. இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்திய அரசு கடந்த பிப்ரவரி 25, 1998 அன்று இரண்டு ரூபாய் நினைவு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: