கைம்பெண் மறுமணம், தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி, தமிழ் கடவுள் வழிபாடு போன்றவற்றை வலியுறுத்திய ஐயா வேளாளர் கசு பிள்ளையின் பிறந்தநாள்!!!

0
418
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

கைம்பெண் மறுமணம், ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி, தமிழிலேயே கடவுள் வழிபாடு, தமிழிலேயே சமயச் சடங்குகள் போன்றவற்றை வலியுறுத்தியவர் வேளாள வம்சத்தின் சிறந்த மாணிக்கங்களில் ஒருவர் கசு பிள்ளை..

கோயில்களிலும் மடங்களிலும் முடங்கிக் கிடக்கும் பொருட்களை ஏழைகளின் கல்வி நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியவர் ‘பல்கலைப் புலவர்’, ‘பைந்தமிழ்க் காசு’ எனப் புகழ்ப்பெற்ற கா.சு.பிள்ளை,

தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றினார். தமிழின் கருவூலமாகவும், சைவத்தின் திருவுருவமாகவும் விளங்கினார் கா.சு.பிள்ளை
தமிழகத்தில் எம்எல் படித்த சிறந்த சட்ட பேரறிஞர் ..
பல தமிழ் ஆய்வு நூல்களை எழுதியவர்

வேளாளர் கா.சு.பிள்ளையின் தமிழ்த் தொண்டு தமிழ் மொழி உள்ளவரை என்றும் மறையாது. சமயங்கள் குறித்த ஆய்வு நூல்களை எழுதியவர் சைவசமயம் குறித்து பல ஆய்வு நூல்களை சிறப்பாக எழுதியவர், 1953 லேயே தமிழர்_சமயம் என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டவர்
படித்த ஆய்வு நோக்கில் உள்ள வேளாளர்களில் பல மூத்தவர்கள் இந்து என்ற மாயையில் சிக்காதவர்களாக வடமொழியை வழுவற கற்றும் அந்த மயக்கத்திற்கு ஆளாகதவர்களாக வாழ்ந்த நம் வேளாள இனத்திற்கு வழிகாட்டி சென்றுள்ளனர் இவற்றை எதையும் படிக்காது.. இந்து சந்து
பிராமண குலகுரு
வடமொழி சிறப்பு
தமிழ் தாழ்வு என்ற உளுத்துபோன
சித்பவன் சங்கி தத்துவங்களை வேளாளர் மண்டையில் தினிக்க ஒரு கோடாரிகாம்பு கும்பல் அதிவேகத்தில் வேளாளர்களை மூளை சலவை செய்ய கிளம்பியுள்ளது அவர்களின் கொட்டம் அடக்க கசு பிள்ளை கைகொண்ட சிந்தனை வாரிசுகள் உணர்வோடு உள்ளோம் ….

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: