தமிழக முன்னாள் முதலமைச்சர், திராவிட இயக்க தலைவர்களில் ஒருவர், தி மு க, அ தி மு க என இரு இயக்கத்திலும் பொதுச்செயலாளராக இருந்தவர், நாவலர் இரா. நெடுஞ்செழியன் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

0
702
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

இரா. நெடுஞ்செழியன் (R. Nedunchezhiyan சூலை 111920 – சனவரி 122000தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற கழகத்திலும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலும் பொதுச்செயலாளராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர். ஒரு பாராட்டு விழாவின் போது அண்ணாதுரை, இவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.

தலைவர்களுடன்

குடும்பம்

  • அன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், 11-7-1920 ஆம் தேதி இராசகோபாலனார்-மீனாட்சிசுந்தரி இணையாருக்கு மகனாக பிறந்தார்.
  • இவரது இயற்பெயர் இரா.கோ.நாராயணசாமி என்பதே ஆகும்.
  • பின் நாட்களில் பகுத்தறிவு தந்தை பெரியாரின் திராவிட சித்தாந்த கருத்துகளாலும், தமிழ்மொழியின் மீது கொண்ட பற்றாலும் ஈர்க்கப்பட்டு இவர் அரசியல் ரியதியாக தனது பெயரை நெடுஞ்செழியன் என்று தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டார்.
  • இவரது மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் (பிறப்பு 20-6-1951) [2] என்னும் மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பெயரனும், சொப்னா மதிவாணன் என்னும் பெயர்த்தியும் உள்ளனர். 
  • புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா. செழியன், இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.

கல்வி

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க. அன்பழகன். கல்வி முடிந்ததும், 1945ஆம் ஆண்டில் கோயமுத்தூர் நகரில், அவிநாசி சாலையிலிருந்த, யூ.எம்.எஸ்.விடுதியில் விடுதிக்காப்பாளராகச் சிறிதுகாலம் பணியாற்றினார்.

அரசியல்

சுயமரியாதை இயக்கத்தில்

பல்கலைக்கழகத்தில் பயிலும் பொழுதே, இவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1944 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் கட்சியில் சேர்ந்தார்.

திராவிடர் கழகத்தில்

இவ்வியக்கம், ‘நீதிக்கட்சி‘யோடு இணைக்கப்பட்டு, ‘திராவிடர் கழகம்‘(தி.க.) உருவான பொழுது, அதில் தொடர்ந்தார். அக்கழகத்தின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அக்காலகட்டத்தில், பெரியாரைப் போல இவருக்கும் தாடியிருந்ததால் ‘இளந்தாடி’ நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்

பேரறிஞர் அண்ணா1949 ஆம் ஆண்டு ‘திராவிட முன்னேற்றக் கழகம்‘ தொடங்கிய பொழுது, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1949 முதல் 1957 வரை அக்கழகத்தின் பிரச்சாரக்குழுச் செயலாளராக இருந்தார்.1962 முதல் 1967 வரை எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார்.1957 முதல் 1962 வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1975ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்.

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்

1975ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து, க. இராசாராமோடு இணைந்து, ‘மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்‘ என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டுத்தேர்தலில் ‘அ.தி.மு.க.‘ அமைத்த கூட்டணியில், மக்கள் தி.மு.க. இடம்பெற்றது.1977ஆம் ஆண்டில், மக்கள் தி.மு.க.வை அ.தி.மு.க.வில் இணைத்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்

1977-இல் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். 1978 முதல் 1980 வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர், 1987 முதல் 1989ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். 1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ. ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் தலைமையாகத் தேர்ந்தெடுக்கப்பாடுபட்டார்.

அ.தி.மு.க. (நால்வர் அணி)

ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், க.இராசாராம், செ. அரங்கநாயகம்பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து, அ.தி.மு.க. (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார். அந்த அணியின் சார்பில், அதற்கு அடுத்த தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிது காலம், அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

மீண்டும் அ.தி.மு.க.வில்

  • பின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து, 1989 இல் மீண்டும் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும், 1996இல் இருந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார்.
  • 1991ல் ஜெயலலிதா அவர்கள் 1991 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு உறுதுணையாக இருந்தார். அந்த தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்று நிதித்துறை அமைச்சராக பதவியேற்றார்.
  • அந்த காலகட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பல திட்டங்களையும் இட ஒதுக்கீடு, சமூக நீதி, போன்றவற்றை நிர்ணயிக்கும் சக்தியாக செயல்பட்டார்.
  • 1996 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பலமான தோல்வியை சந்தித்தபோதிலும் தான் ஊழல் வழக்கில் சிறை சென்ற போதிலும் அதிமுக கட்சியை வழி நடத்தி சென்று மீட்டெடுத்த பெருமை நாவலரையே சேரும் என்று ஜெயலலிதா கூறினார்.
  • பின்பு 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிரான கொள்கை உடைய பாரதிய ஜனதா கட்சியில் வாஜ்பாய் பிரதமராக ஆதரவு தரவேண்டும் என்று ஜெயலலிதாவிடம் ஆலோசனை கூறியதும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்தான். அதே போல் அதிமுகபாஜக கூட்டணியில் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் வைகோ மதிமுக இணைவதற்கு காரணமாக இருந்தவரும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்தான். மேலும் அப்போது
  • அதே போல் ஜெயலலிதாவின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் ஒரே வருடத்தில் வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டதற்கும் நாவலர் நெடுஞ்செழியனின் ராஜதந்திர முயற்சியே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்

  • 1967 முதல் 1969 வரை அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
  • அண்ணா மறைந்தபொழுது ஏற்பட்ட பிணக்கால், அதன்பின் பதவியேற்ற கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.
  • 1971 முதல் 1975 வரை கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
  • 1977 முதல் 1980 வரை எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார்.
  • 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.

அண்ணா இறந்த பொழுது பெப்ரவரி 31969 முதல் பெப்ரவரி 101969 வரையும், எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 241987 முதல் ஜனவரி 71988 வரையும் இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு இருந்த பொழுதும் 16 நவம்பர் 1984 முதல் 09 பிப்ரவரி 1985 வரை தற்காலிக முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

நூல்கள்

கட்டுரை

  1. கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம் (தேனி கலவரம் பற்றியது), 1953, மன்றம் பதிப்பகம், சென்னை-1
  2. பண்டைக் கிரேக்கம், 1954, திராவிடப்பண்ணை, திருச்சி
  3. பாவேந்தர் கவிதைகள் – திறனாய்வு
  4. புதிய பாதை, 1948, ஞாயிறு நூற்பதிப்புக் கழகம், புதுச்சேரி. [5]
  5. மதமும் மூடநம்பிக்கையும், திராவிடர் கழகம், சென்னை
  6. மறைந்த திராவிடம், 1953 மன்றம் பதிப்பகம், சென்னை-1
  7. மொழிப்போராட்டம், 1948 அக்டோபர் 18, திராவிடப்பண்ணை, திருச்சி.
  8. திமுக
  9. திருக்குறளும் மனுதர்மமும்
  10. நீதிக்கட்சியின் வரலாறு
  11. வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் (தன்வரலாற்று நூல்), நாவலர் நெடுஞ்செழியன் அறக்கட்டளை, சென்னை.

சொற்பொழிவு

  1. எழுச்சி முரசு; 1946; திராவிட மாணவர் கழகம், பொன்மலை சொற்பொழிவு எழுச்சியும் அரசு 1946இல் திராவிடர் கழகம் சொற்பொழிவு எவ்வளவு. (பொன்மலை திராவிட மாணவர் கழக முதலாமாண்டு விழாவில் ஆற்றிய உரை) 
  2. சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம்; 1949; மறுமலர்ச்சி நூல்நிலையம், சென்னை. (இரண்டாம் பதிப்பு: 2018, திராவிடர் கழகம், சென்னை.) (1949ஆம் ஆண்டில் சென்னை அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரை)
  3. பகுத்தறிவு முழக்கம், திராவிடர் கழகம், சென்னை
  4. தீண்டாமை (சென்னை அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரை)

உரை

  1. திருக்குறள் தெளிவுரை, நாவலர் நெடுஞ்செழியன் அறக்கட்டளை, சென்னை.

மொழிபெயர்ப்பு

  • இங்கர்சால் நூலொன்றை மொழிபெயர்த்துள்ளார்

இதழாளர்

  • மாலைமணி நாளிதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
  • மன்றம் என்ற மாதம் இருமுறை இதழை 1-5-1953ஆம் நாள் தொடங்கினார்.
  • திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட நம்நாடு இதழின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.

இவர் எழுதிய புத்தங்கள்

நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2021 திசம்பர் 26 அன்று சென்னைசேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நெடுஞ்செழியனின் மார்பளவு சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் இரா. நெடுஞ்செழியனின் நூல்களை நாட்டுடமையாக்கி அதற்கான நூலுரிமைத் தொகையாக அவரின் வாரிசுகளுக்கு 25 இலட்சம் வழங்கினார்.மன்றம் அச்சம் என்னும் பெயரில் ஓர் அச்சகத்தையும் மன்றம் பதிப்பகத்தையும் 26, நைனியப்பன் தெரு, மண்ணடி, சென்னை-1 என்னும் முகவரியில் 1953 மார்ச் மாதம் நிறுவினார்.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: