ராஜேந்திர சோழனின் பிறந்த தினம் பற்றியும் அவரது வாழ்கை சிறப்பு பற்றியும் சிறுகுறிப்பாக இப்பகுதியில் காண்போம்!

0
497
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

இராஜராஜ சோழனின் தவ பதல்வன். கோப்பரகேசரி வர்மன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், மும்முடி சோழனின் களிறு போன்ற வெற்றி பெயர்களை கொண்ட இராஜேந்திர சோழனின் பிறந்த தினம் ஆடி திருவாதிரை 05-08-2021 இந்த நன்நாளில் சோழனின் திருவடியை வணங்கி மகிழ்கிறோம் விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது.இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.

இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.,ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: