வரலாற்றை சரி செய்யும் நோக்கோடு, துளுவ வேளாளர்களின் முன்னெடுப்பு! வேளாளர்கள் அனைவரும் துணை நிற்போம், ஆதரவளிப்போம்!! – அக்னி சுப்ரமணியம், தலைவர், வேளாளர் மையம்!
பன்நெடுங்காலமாக துளுவ வேளாளர், வேளாள சமூகத்தின் ஓர் அங்கம் என்பது பல்வேறு ஆதரங்களில் இருந்து வந்திருக்கிறது. துளுவ வேளாளர்களின் பட்டமான முதலியார்கள் என சொன்னால், அனைத்துலக அளவில் அவர்களின் பெருமைகளை அறிந்து கொள்ள முடியும். துளுவ வேளாளர்கள், தமிழ் இனத்தின் முன்னேற்றத்திற்கு செய்து வந்த பணிகள் அனைவராலும் போற்றக் கூடியது. குறிப்பாக தமிழ் சமூகத்தின் அரசியல் பங்கில் அவர்களது பணி அளப்பறியது. மற்றைய சமூகங்களைக் காட்டிலும் ஆளுமை மிக்கது. தமிழக தலைநகர் சென்னையின் வளர்ச்சியில் அவர்கள் இல்லாமல், இன்று இவ்வளவு பெரிய நகரமாக இருக்க சாத்தியமில்லை என்று பல அறிஞர்களின் கருத்தாகவும், அது நிருபணமாகியும் உள்ளது.
அப்படிப்பட்ட துளுவ வேளாளர் குடியை, தமிழக அரசு, அரசாணை மூலம், அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக, வேளாள இனத்திற்கு தொடர்பற்ற ‘அகமுடையார் என்ற மற்றொரு தமிழ் குடியில் அடங்கும்’ என அறிவித்ததன் காரணமாக, துளுவ வேளாளா்கள் மதில் மேல் பூனை போன்ற குழப்ப நிலையில் இதுவரை இறுதி முடிவு எடுக்க முடியாத சூழலில் – தென் மாவட்டங்களில் பலரும், வட மாவட்டங்களில் சிலரும், தங்களை அகமுடையார் என்ற அடையாளத்தில் சான்றிதழ்களில் பதிந்து வந்துள்ளனர். இதுவரை அரசாணையை துளுவ வெள்ளாளர்கள் எதிர்காததற்கான காரணமும், அகமுடையாருக்குள் இருப்பதால், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் சலுகைகளை அனுபவிக்கலாம் என்ற சிற்றாசையும் ஒன்றாக இருந்து வந்துள்ளது மறுக்க முடியாதது. ஆனால், இதை பயன்படுத்தி, அகமுடையார்களும், துளுவ வெள்ளாளர் / வேளாள சங்கங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் சில ஆண்டுகளாக கொண்டு வரும் முயற்சியில் வெற்றியும் பெற்றனர். பெருமைமிகு, துளுவ வெள்ளாள முன்னோடி தலைவர்களை, தங்களது அகமுடைய தலைவர்களாக உலகுக்கு காட்ட முயற்சிகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது. அகமுடையாரின் மக்கட்தொகையையும் உயர்த்தி காட்டும் முயற்சியும் இருந்து வருகின்றனர். தமிழக அரசிதழின் அரசாணை மூலம், அகமுடையார் என்ற மற்றொரு தமிழ் குடியில் அடங்கும் என அதிகாரபூர்வமாக இருந்த காரணத்தால், இவைகளை நடைமுறையில் தடுக்க இயலாமல் இருக்கிறது. இந்த செயல்பாடானது, மாபெரும் குழப்பத்தையும், துளுவ வேளாளகளுக்குள்லேயே பிரிவினை ஏற்படுத்தி மறைமுகமாக பகையை வளர்த்து வந்துள்ளது என்பது நிதர்சனம்.
மேற்கண்ட பகை இனியும் உருவாகாமல் தடுக்க, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நமது “வேளாளர் மையம்” பல முறை கோரிக்கையை பதிவு செய்தே வந்துள்ளது. அத்தோடு நில்லாமல், துளுவ வேளாளர் சமூகத்தை முன் நடத்தி செல்லும் கள பணியாளர்களிடமும் வேண்டுகோள்களையும் பல முறை முன் வைத்திருந்தது.
இப்போது துளுவ வெள்ளாள முன்கள பணியாளர்களிடமிருந்து நல்ல செய்தி நமது வேளாள சமூகத்திற்கு வருகிறது.
வரும் டிசம்பர் மாதம், 19-ம் தேதி ஞாயிறன்று, இது குறித்த முதல் கலந்தாய்வினை விழுப்புரத்தில் கூட்டியுள்ளனர்.
இச்செயற்பாட்டை அந்த குடியை சார்ந்த துளுவ வெள்ளாளர்கள், யார் முன்னெடுத்தாலும், அதை நமது வேளாளர் மையம் வரவேற்கும். அந்த வகையில், உலக வேளாளர் சங்கத்தின் தலைவர் திரு. வா.பா.பழனி மற்றும் வேளாள சமூகத்தோடு பல ஆண்டுகளாக பயணித்து வருபவரும், முதல் குரல் ஆசிரியருமாக மருத்துவர் கு.ப. ரவீந்திரன் மற்றும் இவர்களோடு இணைந்து பணியாற்றும் அனைத்து உறவுகளையும் வரவேற்பதோடு, நமது வேளாளர் சமூகம் இந்த மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும் மாற்றத்தின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் நல்க வேண்டும் என்று வேளாளர் மையத்தின் தலைவர் என்கிற முறையில் அன்போடு கோரிக்கை வைக்கிறேன்.
இவர்கள் எடுத்துள்ள இப்பணியானது எளிமையாக நிகழ்த்த கூடியதன்று. இந்த பெரு மாற்ற முயற்சிக்கு பல இடையூறுகள் வரலாம். எதிர்ப்புகளும் வரலாம். வேளாளர்கள் சிலரே கூட குழப்பம் ஏற்படுத்த நினைக்கலாம். அதையெல்லாம் முறியடித்து வெற்றிக் கணியை கொண்டு வர வேண்டும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும் மாற்றத்தின் முயற்சியை மேற்கொள்ளும் பொறுப்பாளர்கள், மிகுந்த கவனத்தோடு, துளுவ வேளாளர்கள், ‘வேளாளர்களே’ என்பதற்கான அனைத்து வித ஆதரங்களையும் முன் வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளார்கள். இயலுமானால், ஒரு அச்சில் சிறு வெளியீடாக கொண்டு வர வேண்டும்.
விழுப்புரத்தில் தொடங்கி, அடுத்த அனைத்து கூட்டங்களிலும் பல்வேறு வேளாள சமூக தலைவர்களையும் சிறப்பு பார்வையார்களாக அழைக்கப்பட்டால் கலந்துரையாடல் கூட்டம் இன்னும் சிறப்படையும். இதை தவறாமல் செய்ய வேண்டும் என்று கூட்ட குழுவினரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அக்னி சுப்ரமணியம்
தலைவர்
வேளாளர் மையம்