மாவலி வாணாதிராயன் ஆண்ட மாறன்நாடு (மாரநாடு) பகுதி, இன்றைக்கு திருப்புவனம் அருகே உள்ள சிற்றூர். இந்த பகுதியில் ஜாதி என்ன என்று கேட்டால் பிள்ளைமார் எனத்தான் கூறுவர். பிள்ளைமார் என்றால் அது வெள்ளாள மக்களை மட்டும் தான் இப்பகுதியில் குறிக்கும்
மாவலி வானக்கோவரையர் வாணாதிராயர் கார்காத்த வேளாளர் என்பதனை வரலாறும் தொல்லியல் ஆவணமும் தெளிவாக விளக்கும் வாணர்குலம் என்பது வேளாளர்களில் கார்காத்த வேளாளரை சுட்டும் சிறப்பான பெயராகும். மாவலி வம்சம் என்ற குறிப்புகள் புராணக்கதை யாவும் வேளாளர்களையே குறிக்கிறது.
கார்மண்டல சதகம், கார்காத்த வேளாளர் மடத்துச்செப்பேடுகள் இவற்றை உறுதி செய்யும் மற்றும் தொன்று தொட்டு வாணாதிராயரை கார்காத்த வேளாளர் சங்கங்கள் தங்களது அடையாளமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மாவலி கார்காத்த வேளாளர் வானக்கோவரையர் வாணாதிராயரை வேற்று சமுதாயத்தினராக அகமுடையர் என்றவாறு கூறுவதும் கண்டிக்கதக்கது. தமிழ் சமுதாயத்தினர்கள் அவர்களது சமுதாய பிரமுகர்களை மட்டும் அவர்களது சமுதாய ரீதியாக அடையாளப்படுத்துங்கள் பெருமை மிக்க நபர்கள் மாற்று சமுதாயத்தவர் என்று தெரிந்தும் பெருமைக்காக அவர்களை உங்களது சமுதாயத்தவர் என்று பொய்மையான கருத்தை பரப்பி அவமானத்தை படுத்துவதாகும்.
மாவலி வாணாதிராயர்கள் கார்காத்த வேளாளர்கள். அவர்களிடமிருந்தே அவர்களது சிறப்பான வாணாதிராயர் பெயர் பிறருக்கு பட்டமாக வந்தது என்பதனையும் கார்காத்த வேளாளர் தான் வாணாதிராயர்கள் என்பது கள்ளர், முத்தரையர், வன்னியர், மறவர், அகமுடையர், ஆகியோரே ஒப்பு கொண்ட குறித்த விசயங்கள் தான். வாணாதிராயர்கள் கல்வெட்டு எதிலும் மறவர் என்றோ, அகமுடையார் என்றும் இல்லை.
கொங்கு நாட்டில் வாணவராயர் வல்லவராயர் என்ற பெயரில் கொங்கு வெள்ளாளர்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்களை பற்றிய பாளையபட்டு வம்சாவளியில் சோழ ராசாவின் மகளை மணந்ததால் இந்த பகுதி சீமை இவர்களுக்கு சீதனமாக வழங்கப்பட்டு தென்திசை சீமை வெள்ளாளர்கள் என வழங்கப்பட்டு பின்னால் கொங்கு வெள்ளாளர்கள் என்னும் நற்குடி நாற்பத்தொன்னாயிரம் குடி நற்குடி வெள்ளாளர்கள் என்னும் பெயர் பெற்றனர் என வாணராய கவுண்டர் வம்சாவளி கூறுகிறது. கொங்கு நாட்டு “கணக்கண் கூட்டத்தார் பட்டயம்” என்னும் வெள்ளாளர் கூட்டத்தின் ஆவனம் உள்ளது.