இந்தியாவின் விடுதலைக்கு வெள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மூத்தவர்களின் கொங்கு நாட்டில் தளி பாளையக்காரரும், காங்கேயம் நாட்டில் தீரன் சின்னமலையும் முக்கியமானவர்கள். ஆங்கிலேயர்களுக்கு தீரன் சின்னமலை சிம்மசொப்பனமாக இருந்தார். திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பிறகு தமிழ்நாடு ஆங்கிலேயர்களின் வசம் வந்தது. ஆனாலும் தீரன் சின்னமலை ஆண்ட ஓடாநிலை அரசு மட்டும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய மறுத்தது.
காங்கேயத்துக்கு கிழக்கே ஓடாநிலை கோட்டை கொத்தளம், அரண்மனை என்று அமைத்து தீரன் சின்னமலை ஆட்சி செய்து வந்தார். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்த மாட்டேன் என்று சுகந்திரமாக செயல்பட்டுவந்தார். இதை பொறுக்காத ஆங்கிலேயர்கள் 3 முறை ஓடாநிலையில் மீது போர் தொடுத்து தோல்வியையே சந்திக்க நேர்ந்தது.
அந்த காலத்தில் பொதுமக்கள் யாரும் வாழ், வேல், ஈட்டி போன்ற படைக்கல பொருட்கள் வைத்திருப்பது குற்றம் என சட்டத்தை பிரகடனப்படுத்தியது ஆங்கிலேய அரசு. தீரன் சின்னமலை தன்ஆளுகைக்கு உட்பட்ட மக்கள் அனைவருக்கும் போர்ப்பயிற்சி அளிக்க முடிவு செய்தார். அதற்காக சிவன் மலை அருகே பட்டாலி என்ற கிராமத்தை விலைக்கு வாங்கினார். சிவன் மலைக்கு நேர் பின்புறம் உள்ள அனுமந்தராய கோவிலை ஒட்டி மேற்கே, பலமான கருங்கற்களும், செங்கல் கொண்ட 2 அடி அகலமான சுவர்களைக்கொண்டு போர்ப்பயிற்சி பாசறை எழுப்பினார். பின்னர் அதில் தன் பகுதி மக்களுக்கு வாள், வேல், சிலம்பம், போன்ற தமிழர்களுக்கே உரித்தான தப்பயிற்சியை தினமும் பயிற்றுவித்தார்.
220 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த போர் பயிற்சி பாசறை தற்போது மிகவும் சிதிலம் அடைந்ததாக காணப்படுகிறது, அதனைச்சுற்றி புத்தர்களும் மண்டியுள்ளது இதனுடைய ௨ சுவர்பகுதிகள் மிகவும் சிதிலமடைந்ததாக காணப்படுகிறது. தீரன் சின்னமலைஅமைத்த இந்த போர்ப்பயிற்சி பாசறை மட்டுமே தற்போது அவரின் நினைவாக உள்ளது. ஓடாநிலையில் அமைத்த கோட்டை கொத்தளம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டது.அவர் உருவாக்கிய இந்த போர்ப்பயிற்சி கட்டிடத்தை பாதுகாத்து நாம் வருங்கால இளம் தலைமுறையினருக்கு நாம் தமிழகத்தின் வீரத்தை எடுத்து சொல்லும் வகையில் வீர வரலாற்று சின்னத்தை மத்திய தோல் பொருள் துறையினர் ஆய்வு செய்து சீர்படுத்தி பாதுகாத்து காட்சி படுத்தவேண்டும்.
அமைவிடம் :
சிவன்மலை நேர்பின்புறம் கிரிவலப்பாதையில் உள்ள அனுமந்தராயன் கோவில்-வடக்குக் காம்பவுண்டு சுவர் தாண்டி எட்டிப்பார்க்கலாம்.
செய்தி: நன்றி. தினத்தந்தி