பிற சமூக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லையே என்று 1921 ல் வெள்ளாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்கள் 2021 ல் வெள்ளாளர்களுக்கே நீதி கிடைக்க வில்லை எனில் திராவிட கட்சிகளின் அஸ்தமனம் தொடங்கி விடும் என்று தோன்றுகிறது.
பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் நாம் பெரும்பான்மை சமுதாயமாக இருந்தும் நம்மவர்கள் அரசியல் அதிகாரம் செலுத்த முடிய வில்லை ( 25 மாவட்டத்திர்க்கு மேல் நாம் தான் பெரும்பான்மை மக்கள்) எந்த கட்சியிலும் ஒரு பெரிய ஆளுமைகள் கிடையாது அரசியல் அதிகாரத்தை இழந்த நாம் இப்பொழுது வேளாளர் அடையாளத்தையும் இழந்து விட்டோம். வரம் குடுத்தவன் தலையிலேயே கையை வச்சது போல வளத்த கிடா மார்பில் பாய்ந்தது போ வேளாளர்களால் உருவாக்கபட்ட திராவிட இயக்கங்கள் வேளாளர்களை அழிக்க நினைத்தால்? வெள்ளாளர்களின் எழுச்சி திராவிடத்தின் வீழ்ச்சி என்று வந்து விடுமோ என்று ஐயம் தோன்றுகிறது
வெள்ளாளர்களின் நிலைமை கட்சி தலைவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது கட்சியில் இருக்க கூடிய நமது இனத்தை சேர்ந்தவர்கள் சரியான முறையில் எடுத்துரைக்க வில்லையா என்று தோன்றுகிறது
பெயர் பிரச்சினையில் அரசியல் கட்சிகளின் சரியான நகர்வு இல்லை என்றால் இவர்களின் வீழ்ச்சி உறுதியாகிவிடும்.
நன்றி : M. R. M. முத்து.