மாநில கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை -யின் பொதுசெயலாளரும், நான்கு திசை வேளாளர் சங்கத்தின் தலைவருமான அண்ணன் திரு. தேவராஜ் அவர்கள் மரியாதை நிமித்தமாக, சென்னை-யில் தேனாம்பேட்டை, அண்ணா சாலை -யில் உள்ள வேளாளர் மையத்தின் தலைமை நிலையத்திற்கு வருகை புரிந்தார்.
வேளாளர் மையத்தின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
3 மணிநேர சந்திப்பில், வேளாளர் சமுதாயம் எதிர்நோக்கியுள்ள சமகால பிரச்சனைகள், அதனை சீர் செய்யும் வழிகள், அடுத்தகட்ட நகர்வுகள் என நுணுக்கமான, ஆழமான பரந்த நோக்கோடு வருங்கால திட்டங்கள் என்பன பேசப்பட்டன.
விரைவில் திட்ட கள செயல்பாடுகள் எடுத்து செல்லப்படும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.