தற்போது நமது வேளாளர் பெயர் குறித்த நீதிமன்ற வழக்கு சூடு பிடித்துள்ளதாக தெரிகிறது.
வழக்கின் ஆரம்பம் முதல், தமிழரான உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி 2-3 மாதங்களுக்கு நமது வேளாளர் பெயர் வழக்கை பார்த்து வந்தார் என்பது அறிந்த ஒன்று. திமுக அரசு பதியேற்றது முதல் மறைமுகமாக வழக்கு திசையின் பாதை மாறுவதை காண கூடியதாக இருக்கிறது..
இந்நிலையில்தான், ஏனோ திடீரென தெலுங்கை தாய்மொழியாக கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு நமது வழக்கிற்கான நீதிபதியாக மாற்றப்படுகிறார். இவர் வரும் வரை நமது வழக்கின் முதன்மை தரப்பாக உறவு சிவபிரகாசம் இருந்து வந்தார். இவர் பதியேற்றதும், நமது வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் யாரும் அரியாத வண்ணம், வழக்கின் முதன்மை தரப்பு மாற்றப்பட்டதே பெரிய ஐயத்தை ஏற்படுத்தியது. அப்படி முதன்மை தரப்பாக மாற்றப்பட்டவர்கள், ஆளும் கட்சிக்கு துணை போகிறவர்கள் என்பது நாம் அனைவருக்கு நன்றாக தெரியும். ஆனால், மாற்றப்பட்டது குறித்து எமக்கு ஒன்றும் தெரியாது என மாற்றப்பட்ட குழுவினர் கூறி வருவது சிறிதளவு மன நிம்மதியை தருகிறது. சொன்னபடி இருக்க வேண்டிய இந்த உறுதிமொழி, வேளாள குலத்தில் பிறந்த ஒவ்வொருவரின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
இப்போது, இதுவரை நமது வழக்கு ஒரு மாத இடைவெளியில்தான் வாய்தா கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது, அந்த காலம் சுருக்கப்பட்டு, வரும் 09-11-2021க்கு வாய்தா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. நமது மக்கள் திரள் அமைப்புகளுக்கு இப்போதுதான் அதிகமான வேலை வந்துள்ளது. எல்லா வகையான போராட்டங்களையும் கையில் எடுக்க வேண்டும். அரசிடம் நமது கோரிக்கை வலுப்பெற்றாக வேண்டும். நீதிமன்றத்தின் காதுகளுக்கு நமது நியாயமான கோரிக்கை சென்றடைய வேண்டும். பொதுமக்களும் எமது வழக்கின் உண்மை தன்மையையும ஞாயத்தையும் புரிந்து கொள்ள செய்ய வேண்டும்.
இப்போது, இதை நாம் செய்ய மறந்தால் அல்லது மறுத்தால்…. இனி என்ன நிகழ போகும் என்பதை இனி நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!
அக்னி சுப்ரமணியம்
வேளாளர் மையம்
www.velaler.com
79045761































