எழுத்துலகின் ஜாம்பவான், சாகித்திய அகாடமி விருது பெற்றவர், ஐயா வெள்ளாளர் வல்லிக்கண்ணனன் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் ஐயா தமிழுக்கு ஆற்றிய சேவையை போற்றி வணங்குவோம்

0
405
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 – நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார்.

அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.

எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது.

இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

சில நூல்கள்

அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.

  1. கல்யாணி முதலிய சிறுகதைகள் – 1944
  2. நாட்டியக்காரி – 1944
  3. உவமை நயம் (கட்டுரை) – 1945
  4. குஞ்சலாடு (நையாண்டி பாரதி ) – 1946
  5. கோயில்களை மூடுங்கள்! (கோர நாதன்) கட்டுரை – 1946
  6. பாரதிதாசனின் உவமை நயம் – 1946
  7. ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) – கதை – 1948
  8. அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை – 1947
  9. சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948
  10. மத்தாப்பு சுந்தரி (கதை) – 1948
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: