கி.பி.1800-சமயங்களில், மிகப் பெரிய வீரனாய், வேலுநாச்சியாரோடும், மருது சகோதரர்களோடும் பயணித்து, வெற்றிகளை ஈட்டித் தந்த கொங்கு வேளாளர் இனத்தின் வரலாற்று நாயகன் துப்பாக்கி கவுண்டர் அவர்களின் இன்றைய வாரிசானா, திரு.ஐயப்பன் அவர்கள், இன்று நமது சென்னை, அண்ணா சாலை – யில் உள்ள “வேளாளர் மையம்” அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். அன்னாரை பொன்னாடை போர்த்தி வரவேற்று, சிறப்பித்து, நீண்ட நேரம், வேளாளர் மையத்தின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் உரையாற்றினார்.
வரலாற்று நாயகன் துப்பாக்கி கவுண்டரின் பல ஆவணங்கள் எதிரிகளால் திருடப்பட்டும், அழிக்கப்பட்டும் விட்டனர். அதனால், இவரது பெருமையை உலகுக்கு மறைக்கப்பட்டு விட்டது. மதுரை அருகே உள்ள திருப்பாச்சேத்தி என்ற ஊரில் உள்ள கோயிலின் உட்புறமுள்ள மேற் பதிக்கப்பட்ட கல் ஒன்றில் இவரைப் பற்றிய கல்வெட்டு இன்றும் காணப்படுகிறது.
சமகாலத்தில், இரு இடங்களில் மட்டுமே இவருக்கு பழங்கால சிலைகள் இருந்தன.
திருப்பாச்சேத்தியில் உள்ள கோயிலின் உட்புறம் சிலை ஒன்று இன்றும் உள்ளது. அச்சிலையைதான் அன்மையில் நமது வேளாள உறவுகளோடு, மதுரை ஆதினம் வந்திருந்து, பெருமை சேர்த்தார்.
மற்றொரு சிலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற காளையார் கோயில் முன்பு இருந்தது. அதை, வேலு நாச்சியாரின் இன்றைய வாரிசுகள், சிலையை உட்புறம் வைக்க சில ஆண்டுகளுக்கு முன் எழுத்துப்பூர்வமாக கேட்டு கொண்டனர். இதையேற்று, துப்பாக்கி கவுண்டரின் இன்றைய வாரிசுகள், துப்பாக்கி கவுண்டரின் சிலை கோயிலின் உட்புறம் ஒரு இடத்தில் புதிதாக மேடையமைத்து வைத்தனர். ஆனால், மருது சகோதரர்களின் பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்த சிலர், காவல்துறையில் முறையிட்டதால், மீண்டும் துப்பாக்கி கவுண்டரின் சிலையை புதிதாக நிர்மானிக்கப்பட்ட இடத்திலிருந்து பெயர்தெடுத்து, கோயிலின் முன்புறம், கம்பி வேலிகளுக்குள் வைத்து அருகில் சென்று யாரும் மரியாதை செய்ய முடியாதவாறு, யாரும் கேப்பாறற்று அமைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வேதனையளிக்கிறது.
இந்த வேதனையான செய்திகளை உள்வாங்கிய நாம், உடனே, காளையார் கோவிலில் உள்ள நமது வேளாள இளைஞரின் முன்னோடி திரு.சண்முகம் அவருக்கு தொலைப்பேசியில் அழைத்து, அடுத்த ஒரு வருடத்திற்குள், துப்பாக்கி கவுண்டரின் சிலையை உரிய இடத்தில் வைப்பதோடு, ஆண்டுதோறும் நமது சமூக மக்கள் மரியாதை செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம் அவரும் உடனிருந்து இதை செய்வதாக உறுதியளித்தார்.
மாவீரன் துப்பாக்கி கவுண்டரின் சிலையை மீண்டும் மக்களுக்கு தெரியும் வண்ணம், நமது வேளாளர் சமூகம் அனைத்து தரப்பிலும் முன்வந்து உதவி செய்து, வரலாற்று நாயகனின் புகழை பரவ செய்ய வேண்டும் என்று வேளாளர் மையம் கேட்டுக் கொள்கிறது.
அக்னி சுப்ரமணியம்
தலைவர்
வேளாளர் மையம்