1. வேளாளர் மெய்கீர்த்தி
செய்தி : சோழர்களின் ஆட்சி காலத்தில் தென்னிந்தியா முழுவது வெள்ளாளர்களுக்கு மெய்கீர்த்தி கிடைக்கு. இந்த மெய்கீர்த்தி நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கிடைக்கிறது, அதன் ஒரு கல்வெட்டை கீழே வழங்கியுள்ளேன்.
ஸ்வஸ்தஸ்ரீ திருவாய் கெழ்வி முன்னுடையதாக
ஸ்ரீமத் பூதேவி புத்ராணாம்
சாதூர் வர்ணஸ்ய
குலோத்பவ
ஸர்வலோ ஹிதார்தாய
சித்ர மேளஸ்ய ஸாஸநம்
ஜகதாமேதத் பாலநம்
ராஸ்ட்ர போஷணம்,
ஸ்ரீ பூமி தேவிக்கு மக்களாகி
நிகழச்செந்தமிழ் வடகலை தெரிந்து
நீதிகேட்டு நிபுணராகி,
எத்திசையும் விளங்கஇன்சொல்லால் இனிதளித்து
வன்சொல்லால் மறங்கடித்து
இச்சதுஸ்ஸாகர பரிமலத்து
சந்திராதித்த வரை இனிதோங்க,
வாதராசன் காற்றசைப்ப
வருணராசன் நீர்தெளிப்ப
தேவராசன் திசை விளங்க
எத்திசை மகளிரும் இனிது வீற்றிருப்ப
தெங்கும் பலாவும் தேமாஞ்சோலையும்
வாழையும் கமுகும் வளர்கொடி முல்லையும்
பூவையும் கிள்ளையும் பொலிவோடு கெழுமி
வாட்டமின்றி கூட்டம் பெருகி
அறம் வளர கலிமெலிய
புகழ்பெருகு மனுநெறிதளைக்க
புரை பணியதிசையணைத்தும் செவிடுபடாமல்
செங்கோலே முன்னமாகவும்
சித்திரமேழியே தெய்வமாகவும்
எழுபத்து ஒன்பது நாட்டு உத்தம நீதியும் உயர்பெரும் கீர்த்தியும்
முத்தமிழ் மாலை மும்மையும் நிறைந்த
சித்திரமேழி பெரிய நாட்டோம்
க்ஷ்மையினோடு கருணை யேய்தி
சமைய தன்மம் இனிது நடாத்துகின்ற
ராஜேந்திர பெருங்காளரோம்
(தாமரைப்பாக்கம் கல்வெட்டுக்கள் மற்றும் A.R.E No: 197 of 1894, A.R.E No: 117 of 1900, A.R.E No: 21 of 1908 மற்றும் பல S.I.I தொகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டது)
2. ஆர்-நாட்டார் மலை கல்வெட்டு
மாவட்டம் : கரூர்வட்டம் :
புகளூர்ஊர் : ஆர்-நாட்டார் மலைஇடம் :
சமண படுகைமொழி : தமிழ்எழுத்து :
பிராமிஅரசு : அறியவில்லைமன்னன் :
அறியவில்லைஆட்சி ஆண்டு : அறியவில்லைவரலாற்று காலம் : 2 ஆம் நூற்றாண்டு
செய்தி : கரூர் மாவட்டம் புகளூர் என்னும் ஊரில் அருகில் ஆர்-நாட்டார் மலை என்று மலையில் சமண படுகைகள் உள்ளது. அங்கு சேரமன்னனின் கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதன் அருகே கொற்றந்தை குலத்தாரின் கல்வெட்டும் கிடைக்கிறது.
ஆதாரம்: பழைய தமிழ் பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு பக்கம் – 414
கல்வெட்டு மூலம்:
1. கொற்றந்தை (இ)ளவல்2. முன்று
3. இடிகரை கல்வெட்டு
மாவட்டம் : கோயம்புத்தூர்வட்டம் :
கோவை வடக்குஊர் : இடிகரைஇடம் :
வில்லீஸ்வரார் கோவில்மொழி : தமிழ்எழுத்து :
தமிழ்அரசு : சோழர்மன்னன் :
மூன்றாம் விக்கிரம சோழன்ஆட்சி ஆண்டு : 3வரலாற்று காலம் : கி.பி. 1276
செய்தி : கொற்றந்தை குலத்தை சேர்ந்த முதலி வீரன் என்பவன் விளக்கெரிக்க 10 வராகன் கொடையளித்துள்ள செய்தி கூறப்பெறுகிறது. இதில் காசிப கோத்திரத்து சிவபிரமானன் என்பனை “சித்திர மேழிபட்டன்” என்று வழங்கப்பெறுவது கவனிக்கதக்கது.
ஆதாரம்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி – 1, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு 2006, பக்கம் – 358, தொடர் எண்: 158/2004 யில் காண்க
கல்வெட்டு மூலம் :
1. ஸ்வஸதஸ்ரீ விக்கிரம் சோழ தேவற்கு
2. இயாண்டு ந(3) வது வடபரிசார
3. நாட்டு இடிகரையிலிருக்கும்
4. வெள்ளாழன் கொற்றந்தைகளி
5. ல் முதலி வீரனேன் ஆளுடை
6. யார் வில்லிஸ்வர முடையாற்
7. கு வைத்த சந்தியாதீப விளக்கு
8. ஒன்றுக்கு ஒடுக்கின வராகன்
9. பணம் ய(10) இப்பணம் பத்துங் கைக்
10. கொண்டேன் இக்கோயிற் காணியுடைய
11. சிவபிராமணன் காசிவ கோ
12. த்திரத்து திருநட்டன் அகஸ்தீஸ்வரமுடை
13. யானான சித்திரமேழி பட்டனேன்
14. குடங்கொடு கோயில் புகுவான் சந்திரா
15. தித்தவ16. ரை செ
17. ல்வ18. தாக இத்
19. தந்ம20. ம் பன்ம
21. ஹே
22. ஸ்வர
23. ரக்ஷை
4. இடிகரை கல்வெட்டு
மாவட்டம் : கோயம்புத்தூர்வட்டம் :
கோவை வடக்குஊர் : இடிகரைஇடம் :
வில்லீஸ்வரார் கோவில்மொழி : தமிழ்எழுத்து :
தமிழ்அரசு : பாண்டியர்மன்னன் :
வீரபாண்டியன்ஆட்சி ஆண்டு : 10வரலாற்று காலம் : கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
செய்தி : கொற்றந்தை குலத்தை சேர்ந்த மிலசன் பெருமான் என்பவன் விளக்கெரிக்க 10 வராகன் கொடையளித்துள்ள செய்தி கூறப்பெறுகிறது. இதில் காசிப கோத்திரத்து சிவபிரமானன் என்பனை “சித்திர மேழிபட்டன்” என்று வழங்கப்பெறுவது கவனிக்கதக்கது.
ஆதாரம்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி – 1, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு 2006, பக்கம் – 329, தொடர் எண்: 136/2004
கல்வெட்டு மூலம் :
1. ஸ்வஸ்தஸ்ரீ வீரபாண்டிய தேவ
2. ற்கு யாண்டு ய(10) வது வடபரி
3. சாரநாட்டு இடுடிகரையில் வெ
4. ள்ளாழன் கொற்றந்தை மிலசந் பெ
5. ருமானேன் ஆளுடை
6. யார் வில்லீஸ்வரமுடையாற்கு வைத்த ச
7. ந்தியா தீபவிளக்கு ஒன்றுக்கு
8. ஒடுக்கிந வராகந் பணம் ய(10) இப்பண
9. ம் பத்தும் கைக்கொண்டேன் இக்
10. கோயில் காணி உடைய சிவபிரம
11. ணந் காசிவ கோத்திரத்து திரு
12. நட்டன் அகத்திஸ்வரமுடையான் சித்திரமே
13. ழி பட்டனேன் குடங்கொடுகோயில் புகுவார் நிசதி
14. உழக்கு சந்திராதி
15. த்தவரை செலு
16. த்துவதாக இத்
17. தந்மம்
18. பன்மஹேஷ்வர ர
19. க்ஷை
5. கொவில்பாளையம் கல்வெட்டு
மாவட்டம் : கோயம்புத்தூர்வட்டம் : கோவை வடக்குஊர் : கோவில்பாளையம்இடம் : காலகாலேஸ்வரர் சன்னிதி வடக்கு சுவர்மொழி : தமிழ்எழுத்து : தமிழ்அரசு : சோழர்மன்னன் : மூன்றாம் விக்கிரம சோழன்ஆட்சி ஆண்டு : 13வரலாற்று காலம் : கி.பி. 1276
செய்தி : காரைபாடில் இருக்கும் கொற்றந்தை குலத்தை சேர்ந்த அன்னி காலன் மனைகிழத்தி கேசி என்பவள் இரண்டு பழஞ்சலாகை அச்சு காசுகள் விளக்கெரிக்க கொடையளித்துள்ள செய்தி கூறப்பெறுகிறது.
ஆதாரம்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி – 1, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு 2006, பக்கம் – 381, தொடர் எண்: 170/2004
கல்வெட்டு மூலம் :
1. ஸ்வஸ்தஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண்டு பதிமூன்றாவது ஆளுடையார் காலகால ஈஸ்
2. வர்க்குத் திருநந்தாவிளக்கெரிய வடபரிசார நாட்டிற் காரையப்பாடியிலிருக்கும் வெள்ளாளந் கொற்றந்தைகளி3. ல் அன்னி காலந் மனைகிழத்தி கேசியேன் இரண்டு பழஞ்சலாகை யச்சு இத்தேவர்க்கிசைவித்த நம்பி சந்
4. திராதித்யவற் செல்வதாக இத்தன்மம் செய்தேந் கேசியேன்பன்மாயேஸ்வர ரக்ஷை
6. துடியலூர் கல்வெட்டு
மாவட்டம் : கோயம்புத்தூர்வட்டம் : கோவை வடக்குஊர் : வடமதுரைஇடம் : விருந்திஸ்வரர் சன்னிதி தெற்கு சுவர்மொழி : தமிழ்எழுத்து : தமிழ்அரசு : அறிய இயலவில்லைமன்னன் : அறியவில்லைஆட்சி ஆண்டு : – -வரலாற்று காலம் : கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
செய்தி : கொற்றந்தை குலத்தை சேர்ந்த கண்டன் என்பவன் கொயொப்பம் இட்டுள்ளான்.
ஆதாரம்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி – 1, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு 2006, பக்கம் – 397, தொடர் எண் 907/2003
கல்வெட்டு மூலம் :
1. ஸ்வஸ்தஸ்ரீ தை மாத முதல் வடபரிசார நாட்டு நாலூர் பற்றில் துடியலூரில் ஊரும்
2. ஊராளிகளும் எங்களூர் கால்படும் . . ப்பனவும் எங்களூர் நாயினார் திருவிருதீஸ்வர முடைய நாயனாற்கு
3. . . . நிறைவற நிறைந்து குறைவறக் கூடி . . . படியாவது நாயினாற்கு அமுதுபடி பல வெஞ்சனங்களுக்கும்
4. எங்களூரில் உழமடந்திக்கு . . . தினைக்கு . . . கலக்கண்பு மூன்று . . .
5. ந்ததிக்கு தண்டம் ஆட்டை . . . குடுப்போமாகவும் இது வெண்கலம் எடுத்தும்
6. மண்கலந் தகர்த்தும் தண்டிக் கொள்வார்களாகவும் . . . சந்திராதித்தவரை நடக்கக் கடவதாகவும் இந்த
7. ண்டு போவான் இத்தம்மம் . . . குமரிகெங்கை இடை இரக்ஷிக்க . . . துடியலூரில் வெள்ளாழன் கொற்றந்தைகளில்
8. கண்டன் எழுத்து மேற்படியூரில் . . . சேரிப்பூலுவன் . . . ண்டைக்களில் வில்லவா . . . .
7. இடிகரை கல்வெட்டு
மாவட்டம் : கோயம்புத்தூர்வட்டம் : கோவை வடக்குஊர் : இடிகரைஇடம் : வில்லீஸ்வரர் கோவில் கருவறைமொழி : தமிழ்எழுத்து : தமிழ்அரசு : போசளர்மன்னன் : மூன்றாம் வீரவல்லாளன்ஆட்சி ஆண்டு : – -வரலாற்று காலம் : கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
செய்தி : இடிகரை வெள்ளாளன் கொற்றந்தை குலத்தை சேர்ந்த கோக்கண்டன் என்பவன் ரிஷப தேவரை தானாமாக கொடுத்துள்ள செய்தி கூறப்பெறுகிறது
ஆதாரம்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி – 1, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு 2006, பக்கம் – 337, தொடர் எண் 141/2004
கல்வெட்டு மூலம் :
1. ஸ்வஸ்தஸ்ரீ வல்லாளதேவர் திருவிராச்சியம் பண்ணியருளாநின்ற நள வருஷத்து வடபரிசார நாட்டு இடிகரையில் வெள்ளாழன்
2. கொற்றந்தைகளில் பிள்ளையாண்டான கோக்கண்டனேன் ரிஷபதேவர் என் தந்மம்
8. இடிகரை கல்வெட்டு
மாவட்டம் : கோயம்புத்தூர்வட்டம் :
கோவை வடக்குஊர் : இடிகரைஇடம் : வில்லீஸ்வரர் கோவில் கருவறைமொழி : தமிழ்எழுத்து : தமிழ்அரசு : குறிக்கபெறவில்லைமன்னன் : குறிக்கபெறவில்லைஆட்சி ஆண்டு : – -வரலாற்று காலம் : கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
செய்தி : இடிகரை வெள்ளாளன் கொற்றந்தை குலத்தை சேர்ந்த அமரபுயங்க காலிங்கராயன் பிள்ளையாண்டானான காலிங்கராயன் என்பவன் தேஷாத்திரிக்கு விருந்து கொடுத்துள்ள செய்தி கூறப்பெறுகிறது
ஆதாரம்: கல்வெட்டுகளும் காணிப்பாடல்களும், புலவர்.இராசு, கொங்கு ஆய்வு மையம் வெளியீடு-2007. பக்கம் – 66
கல்வெட்டு மூலம் :
1. ஸ்வஸதஸ்ரீ சர்வசித்து வருஷம் பங்குனி மாதம் 4 ஆம் தேதி வடபரிசார நாட்டு
2. நானூற்றுபற்றில் இடிகரை வெள்ளாளன் கொற்றந்தைகளில் அமரபுயங்க காலிங்கராயன்
3. பிள்ளையாண்டான காலிங்கராயன் தேசாத்திரிட்கு சோறிட 40 பணம் வைத்தான்
8. குட்டகம் கல்வெட்டு
மாவட்டம் : திருப்பூர்வட்டம்
அவினாசிஊர் : குட்டகம்இடம்
மொக்கணீஸ்வர் கோவில் கருவறை பின்புறம்மொழி
தமிழ்எழுத்து : வட்டெழுத்துஅரசு
சோழர்மன்னன் : விக்கிரம சோழன்ஆட்சி ஆண்டு
-வரலாற்று காலம் : கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
செய்தி : ராசவிச்சாதிர நல்லூர் வெள்ளாளன் முள்ளி குலத்தை சேர்ந்த விச்சாதிரன் என்பவன் மனைகிழத்தி எறுளங்கோதை என்பவள் கட்டிய கோயில் என்ற செய்தி கூறப்பெறுகிறது. இந்த கோவன் விச்சாதிரன் என்பவன் முதலாம் ராஜராஜனின் படைத்தளபதி ஆவான்.
ஆதாரம்: ஆவணம் 28 ஆண்டு 2017, தொல்லியல் கழகன் வெளியூடு – 2017. பக்கம் – 46
கல்வெட்டு மூலம் :
1. (நரபதி) மூர்க்க ஸ்ரீப்ராக்ரம சோழ(தே)-
2. வர்க்குத் திருவெழுத்திட்டு செ-
3. ங்கோலோச்சி வெள்ளி வெண்குடை மி-
4. ளிரவேன்தி ஆறில் ஒன்று கொ-
5. ண்டல்லவை கடின்து நாடு வள-
6. ம் படுத்து நை குடியோம்-
7. பிக் கோவீற்றிருன்து குடி
8. புறங்காத்துப் பெற்றகுழ-
9. விக்குற்ற நற்றாய்போல் செ-
10. ல்லாநின்ற திருநாள் யாண்டு
11. அஞ்சாவதில் இத்திருக்கொ-
12. யில்லெடுப்பிச்சேன் வட-
13. பரிசாரத்தில் குடவே-
14. டாந இராசவிச்சாதிர நல்-
15. லூரிருன்து வாழும் வெள்-
16. ளாளந் முள்ளிகளில் கோ-
17. வன் விச்சாதிரந் மநை-
18. க்கிழத்தி எறுளங்கோ-
19. தையேன் என் நி
20. ……….. ந் தாந்