சட்டநாதன் ஆணையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன் ஆணையம்.

0
1029
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

1956 – ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை.

அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது.

இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் “சட்டநாத ஆணையம்” 1972 – இல் மு.கருணாநிதி (தட்சிணாமூர்த்தி) தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கண்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது.

சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் “சின்ன மேளம்” (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி ‘அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே’ என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார்.
தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், வட மாநிலத்தவர்கள் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.

தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க.
” சட்டநாதன் ஆணையத்தை ” தமிழகத்தில் நடைமுறைப்படுத்த
தமிழர் அமைப்புகள் மற்றும் தமிழ் குடி சாதி அமைப்புக்கள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும்.

நன்றி
தங்க.ரெங்கராஜ்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: