கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர், அரசியல் நிபுணர், வேளாளர் திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

0
396
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும்

பாலகுமாரா அருணாசலம் மகாதேவா, சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1921 அக்டோபர் 29 இல் பிறந்தவர். இவருடன் உடன் பிறந்தவர் சுவர்ணம் நடராஜா. சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் பேரன் ஆவார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றவர். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இவர் இலண்டன் பல்கலைக்கழகம் சென்று கணிதத்தில் இளங்கலை, மற்றும் முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.

மகாதேவா சேக தியாகராஜாவின் மகள் சுந்தரி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆனந்தகுமார், ஈசுவரி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

பணி

மகாதேவா இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், 1945 சனவரியில் இலங்கைக் குடிமை சேவையில் இணைந்தார். 1949 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சில் துணைச் செயலராகவும், 1952 இல் காணி அமைச்சில் துணைச் செயலராகவும், 1958 இல் வேளாண்மை மற்றும் உணவு அமைச்சில் நிரந்தர செயலராகவும் பணியாற்றினார். அத்துடன் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் செயலராகவும் இவர் பணியாற்றியுள்ளார். திறைசேரியில் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

பிற்கால வாழ்க்கை

குடிமைப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் இவர் மலேசியாவில் ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றினார். பின்னர் இலங்கையில் தேசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராகவும், இலங்கை மக்கள் வங்கியின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். பல தனியார் நிறுவனங்களில் தலைவராக இருந்தார்.

சமூகப் பணி

மகாதேவா கொழும்பு பொன்னம்பலவாணேசுவரர் கோயில், முகத்துவாரம் அருணாசலேசுவர கோயில் ஆகியவற்றின் அறங்காவல் சபைத் தலைவராக செயல்பட்டார். 1990 ஆம் ஆண்டில் இவருக்கு இலங்கை அரசின் இரண்டாவது பெரும் தேசிய விருதான தேசமானிய பட்டம் வழங்கப்பட்டது.

மகாதேவா 2013 நவம்பர் 29 இல் கொழும்பில் காலமானார்.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: