வரலாற்று புத்தகத்திலும், தமிழ் பாட நூல்களிலும் அதியமானை பற்றி படிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த அதியமான் கொங்கு வெள்ளாளர் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒன்று..
அதியமானை பெரும்பாலும் தர்மபுரியோடு சம்பந்தப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதியமானின் ஆதி காணி, ஈரோட்டிற்கருகில் இருக்கும் தட்டான்குட்டை என்ற ஊரே.. குமாரபாளையம் அருகில் உள்ளது..
கன்னகூட்டத்தாரின் ஒரு காணி.. பல நாட்களாக இது தெரியாமலேயே இருந்துள்ளது.. இவர்கள் ஏழு மிகப்பெரும் ஏரிகளை கட்டி, பள்ளர்களை குடிவைத்துள்ளார்கள்.. வளம் கொழிக்கும் பூமியாக இருந்திருக்கிறது..
தகடைப்பாடி – கீழ்கரை பூந்துறை நாட்டின் காணி. வெகுநாளாக தேடி அலைந்த ஊர். தற்போது மருவி தட்டாங்குட்டை என்று இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. பவானி குமாரபாளையமே தகடப்பாடி. இந்த காணியின் காணி தெய்வத்தின் பெயர் கடந்த தொண்ணூறு ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளது. கரியகாளியம்மன் – பதிரகாளியாகியுள்ளது. உலகேசர்-உலகவல்லியம்மை என்பது கைலாசநாதர் – அன்னபூரணி என மாறியுள்ளது. (சுவாமியின் பெயரை மாற்றி நிலங்களை ஆட்டைய போட்டுவிட்டனர் என்ற சந்தேகம் இருக்கிறது.). ஜே.கே.கே. செட்டியார் நாற்பது வருடங்கள் முன்னரே கோயிலை ஜிகாத் செய்து விட்டார். அங்கே கல்வெட்டும் இல்லை. பழைய கோயிலும் இல்லை. கோயில் நிலங்கள் காலேஜாக மாறி விட்டது. ஏழு ஏரிகள் பை-பாஸ் ரோடாகவும், தூர்ந்து போயும் உள்ளது.
இந்த தகடைப்பாடிக்கும், தகடூர்பாடியான அதியனது தகடை நாட்டுக்கு தொடர்புண்டா என்ற ஐயம் உள்ளது. கங்க நாட்டு தகடப்பாடியே இந்த தகடப்பாடியிளிருந்து ஆட்சி செய்யப்பட ஊரோ என்ற சந்தேகம் இருக்கிறது.
கன்ன கூட்டத்தினர் அதன் காணியாளர்கள் மற்றும் நாட்டார்கள். வேட்டுவருக்கு முப்பாடு மற்றும் குதிரை பிடி. சின்னப்பா நாயக்கன் பாளையம் கன்ன கூட்டத்தார் தகடப்பாடி பதினெட்டு ஊர் அனைத்து சாதிக்கும் நாட்டார். தட்டாங்குட்டை கன்ன கூட்டத்தார் தகடப்பாடியின் காணியாளக்கவுண்டர்.
சூரியகிரியில் முருகன் மற்றும் கரிய பெருமாள் கோயில்கள் உள்ளன. அதில்லாமல் தாமோதர பெருமாள் கோயில் உள்ளது.
தற்போது தகடப்பாடி என்னும் இடம் குமார பாளையம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. கோட்டைமேட்டை சுற்றி கன்னகூட்டத்தாரும். எழுமாத்தூர் பனங்காடை களும் வசித்து வருகின்றனர்.
இந்த கோட்டைமேட்டை சுற்றி எங்கு தோண்டினாலும், முதுமக்கள் தாழியும், புதையல்களும் கிடைக்கின்றன. இது கொங்கு நாட்டு ஆதிச்சநல்லூர் எனலாம். தொல்லியல் துறை கவனிக்க வேண்டிய இடமிது. ஏனென்றால், தகடப்பாடி அதியமானோடு சம்பந்தப்பட்டது.
அதியமானின் தடைப்பாடியாக இவ்வூர் ஆதியில் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அதியனுடன் பின்னாளில் வடக்கே சென்றவர்களே விடுகாத்ழகிய பெருமாள் கோயிலை கட்டியவர்களாக இருக்கலாம். மேலும் கூட்டம் மறந்த நிலையில் இருக்கும் தருமபுரி கொங்கு வெள்ளாளர்கள் பிற்கால அதியனுடன் மழகொங்கத்திளிருந்து சென்றவர்களாக இருக்கலாம்.
கொங்கு அதியமான் சேரன் வழியில் வந்தவர்கள் வடகரை வேளாளர் மற்றும் நரம்புகட்டி வேளாளர்கள் கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டம் பவானி to சத்தியமங்கலம் வரை 35 குலத்தினர் பெரும்பான்மையான வாழ்ந்து வருகிறோம்…சத்தியபுத்திரன் அதியமான் என்ற பெயர் சத்தியமங்கலம் என்று பெயராயிற்று.கோபிசெட்டிபாளையம் பாரியூரில் கனவாளன் குலத்தினர் கோபிசெட்டிபிள்ளான் என்பவர்
வாரிவழங்கும் வள்ளளாக திகழ்ந்தார்…அதனால் கோபிசெட்டிபாளையம் பெயராகியது….இவர்களே கொங்கு வடகரைவேளாளர் கவுண்டர் /கொங்கு நரம்புகட்டி வேளாளர் கவுண்டர்