உலக தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா திரு.ஜனார்த்தனம் அவர்களின் பெருமையை பறைசாற்றும் நியூயார்க் வேளாளர் திரு.ராஜா!!!

1
539
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

இலங்கையை பூர்விகமாக கொண்ட நியூயார்க் தமிழர் வேளாளர் திரு.ராஜா அவர்கள் உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா வேளாளர் திரு.ஜனார்த்தனம் பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதோ அந்த கட்டுரை கீழ்காணுமாறு உங்கள் பார்வைக்கு…

நான் முதலில் அவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டில் சந்தித்தேன். உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகத்திலும் இந்திய – இலங்கை இணைப்பு இயக்கம் (Indo – Ceylon Merger Movement) இல் Prof.இரா.கணேசன், பொறியியலாளர் கொடுமுடி சண்முகம் (PWD Dept. Madras), Dr. இரா.ஜனார்த்தனன் (உலகத் தமிழ் மாணவர்/இளைஞர் பேரவைத் தலைவர்), Prof. சாலை இளந்திரையன் (Delhi University) ஆவர் மனைவி Prof.சாலினி  இளந்திரையன் போன்றோருடன் சேர்ந்து செயல்பட்டார்.

புலவர் செ. இராசு வின் வீட்டுக்கு அந்தக் காலத்தில் சென்றிருக்கிறேன். பல காலத்திற்கும் புலவர் இராசு உடனும் அவரது குடும்பத்தினரும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவர் கொங்கு வெள்ளாக் கவுண்டர். அடுத்தவர் டாக்டர் ஜனார்த்தனன். இவர் வெள்ளாளர் பிள்ளை.

இவர் Madras University இல் படிக்கும் போது உலக மாணவர் பேரவை ஐ அமைத்து அதன் தலைவராக இருந்தவர். பின்னர் அதை உலகத் தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பாக மாற்றம் செய்து அதன் தலைவராக இருந்தவர்.பின்னர் உலகத் தமிழ் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர். அவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

இவரால் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை இன்று அக்னி சுப்பிரமணியம் (இவரை உங்கள் அனைவருக்கும் தெரியும்)  என்ற வெளாளரால் நடத்தப் படுகிறது.

டாக்டர் ஜனார்த்தனன் இல்லாது விட்டால் இலங்கைப் போராட்டம் நடை பெற்றிருக்க மாட்டாது. தமிழ் நாடு , இந்திய மத்திய அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலையிட்டிருக்க மாட்டார்கள்.

இரா.ஜனார்த்தனன் உலகத் தமிழ் மாணவர் பேரவைத் தமிழராக இருந்த போது இலங்கை தமிழ் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டு இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடாத்தினர்கள். அதன் தலைவர்கள் எல்லோரும் இலங்கை வெள்ளாளர்கள். இரா. ஜனாத்தான் இலங்கைத் தமிழ் கல்லூரிகளில் தமிழ் மாணவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக சொற்பொழிவாற்றினார்.

இலங்கை மாணவர் பேரவை இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இரா. ஜனார்த்தனன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

பின்னர் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் உலகத் தமிழ் ஆராச்சி மகாநாடு நடை பெற்ற போது இரா.ஜனார்த்தனன் (அப்பொழுது உலகத் தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர்) இந்தியாவில் இருந்து மலேசியா சென்று அங்கிருந்து மகுடாபதி என்ற பெயரில் யாழ்ப்பாணம் வந்து தமிழர் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (வெள்ளாளர்) உடன் தங்கியிருந்தார்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டு இருந்தது கடைசி நாள் திருச்சி National College prof, நைனார் முகமது பேசிக் கொண்டிருந்த போது தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இரா. ஜனாத்தனன் அவர்களை அறிமுகப் படுத்தி அவர் அடுத்ததாக பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே கூட்டத்தில் கல்வெட்டுப் புலவர், கொடுமுடி சண்முகம், சாலை & சாலினி இளந்திரையன், இரா. கணேசன் போன்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த அறிஞர்களும் இருந்தனர்.

இலங்கை அரசாங்கம் காவல் படையை அனுப்பி தாக்குதல் நடத்தியது அதன் விளைவாக 9 பேர் கொல்லப் பட்டனர். இரா. ஜனாத்தான் உடனடியாகக் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் பலாலி – திருச்சி விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டார். அதில் இருந்துதான் இலங்கைத் தமிழர் பிரச்சனை சூடு பிடித்தது.

அதன் பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் S.J.V. செல்வநாயகம் MP (யாழ்ப்பாண கிருஸ்தவ வெள்ளாளர்), அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்  MP, ஆகியோர் இரா.ஜனார்த்தனன் அவர்களால் தமிழ் நாட்டுக்கு அழைக்கப்பட்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு மு. கருணாநிதி – SJV.செல்வநாயகம் ஆகிய இருவரினதும் பிறந்த நாள் சென்னையில் மிகவும் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. இந்தக் காலங்களில் இன்று நீங்கள் அறிவும் இலங்கையின் எந்த விடுதலை அமைப்பும் உருவாகவில்லை என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இரா. ஜனாத்தன் தமிழ் நாட்டில் சில தமிழ் சினிமா படங்களிலும் நடித்துள்ளார். இதனால் இவருக்கும்    எம். ஜி.இராமச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பலருடன் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர் ஒருகாலத்தில் தமிழ்நாடு சட்டசபையில் MLA  (படித்தவர்களுக்கான) ஆகவும் இருந்துள்ளார்.

1983 இல் இலங்கையில் தமிழ் – சிங்கள இனப்பிரச்சனை நடைபெற்ற போது இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் நாயகம் (பாராளுமன்ற MP, பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இலங்கையை விட்டு வெளியேறி சென்னையில் இருந்த டாக்டர். இரா. ஜனாத்தனன் இடம் வந்து சேர்த்தார். அப்பொழுது தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன். டாக்டர். இரா. ஜனாத்தனன் இலங்கைத் தமிழ் தலைவர் அமிர்தலிங்கம் MP ஐ முதலமைச்சர் MGR க்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் டாக்டர்.இரா.ஜனார்த்ததும் முதலமைச்சர் M.G. இராமச்சந்திரனும் இலங்கைத் தமிழ் தலைவர் அப்பாப்பிள்ளை அவர்களை இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர் தான் இந்திய அரசாங்கமும் இந்திய இராணுவமும் இலங்கைத் தமிழருக்கு உதவ வந்து அதன் அடுத்த கட்டமாக இந்திய இராணும் இலங்கை தமிழ் போராட்டக் குழக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது.

ஏன் நான் இங்கு டாக்டர். இரா.ஜனந்த்தனன் பற்றி எழுதுகிறேன் என்றால் அவர் வெள்ளாளர் என்பதால். அவ்வளவுதான். வேறு எதுவித அரசியல் நோக்கமும் இல்லை.   ஜனார்த்தனன் ஐயா உங்களுக்கு விட்டு சென்ற கடமை சிறியது அல்ல, மிகப்பெரியது.

—————

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

1 COMMENT

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: