சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள்

0
335
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள்

தமிழகத்தில் அமைந்துள்ள 18 வைதிக சித்தாந்த சைவ ஆதீனங்களில் பழைமையானதான திருக்கயிலாய பரம்பரை ஸ்கந்த பரம்பரை வாமதேவ சந்தானம் சூரியனார்கோயில் ஆதீனம்
20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள்.

பரிபூரணம் அடைந்த ஆதீனகர்த்தர் அவர்கள் கடந்த 22/01/2019 அன்று கனகாபிஷேகம் (100ஆவது பிறந்தநாள்) கண்டவர்கள். திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகிலுள்ள கோடாரங்குளம் கிராமத்தை பூர்வாசிரமமாக கொண்டவர்கள்.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி எய்திய சூரியனார்கோயில் ஆதீனம் 20ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு மரியாதை செலுத்தியப் பின் சூரியனார்கோயில் ஆதீனத்தின் 21 ஆவது குருமகா சந்நிதானமாக திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் ஸ்ரீமத் அம்பலவாணத் தம்பிரான் சுவாமிகள் அவர்களை நியமித்தார்கள்.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: