ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899- மே 28, 1973) தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
ஆற்றிய பணிகள்
சிதம்பரத்தில் உள்ள இராமசாமிசெட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கண உரையாசிரியர்
தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
படைப்புகள்
வைணவம் தொடர்பாக இவர் படைத்த நூல்கள்- திருவாய்மொழி விளக்கம், திருமங்கையாழ்வார் பெரிய திருமொழிஆகியன. மேலும்,’ புலவர் பெருமை’ எனும் நூலையும் இயற்றியுள்ளார்.
சிறப்புகளும் விருதுகளும்
தனிநாயக அடிகளார், பிள்ளையவர்களின் இலக்கணப் புலமையை அறிந்து, அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்து வீரமாமுனிவரின் ‘தொன்னூல் விளக்கம்’ எனும் இலக்கண நூலைப் பாடம் கேட்டதாகவும் சொல்லுவர். 16-8-1930 இல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசளித்து சிறப்பித்துள்ளது.
மறைவு
மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.