LTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் !!!

0
446
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறப்போராட்டத்தின் வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.] இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார். திலீபனின் நினைவிடம், யாழ்ப்பாணம்.

ஐந்து அம்சக் கோரிக்கை

  1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
  2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
  3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
  4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
  5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

எதிர்வினைகள்

திலீபனின் உண்ணாவிரதம் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு. அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே அவர்களுக்கு கிட்டுவதும், அதுவே உண்மை என பெரும்பான்மை சிங்கள சமூகம் நம்பிவிடுவதும் சில காரணங்களாகும், இருப்பினும் அதனையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கைக் கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறானவர்களின் பார்வையில் திலீபனின் உண்ணாவிரதமும் அவர் கொண்ட கொள்கையின் திடமான பற்றும், அவரது சாகும் வரையான துணிவும் கூட பேசப்படுகின்றன. குறிப்பாக திலீபனின் கொள்கைக்கான உண்ணாவிரதத்தையும், விமல் வீரவங்ச போன்ற சிங்கள அரசியலாளர்களின் கபடமான போலி உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்ட சிங்களப் பதிவுகளும் உள்ளன.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: