சோழிய வேளாளர் குலத்துதித்த திருஅருட்பா செம்பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை B.A, M.L பிறந்தநாள் இன்று ..
வள்ளாரின் நூல்களை சனதனவாதிகள் அழிக்க முற்பட்டதை அறிந்து அவற்றை தேடித்தேடி பதிப்பித்தவர் பாலகிருஷ்ணன் பிள்ளை (19/10/1890 – 31/08/1960) வடலூர் இன்று ஸ்மார்தர்கள் பிடியில் இருந்து தப்பி பிழைத்திருப்பதற்கு காரனமானவர் ஐயனுக்கு புகழ் வணக்கம் !!
கள்ளக்குறிச்சி மாவட்டம், செல்லம்பட்டு கிராமத்தில் ஆறுமுகம்பிள்ளை- சின்னம்மை தம்பதிகட்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.
தொடக்கக் கல்வியை செல்லம்பட்டிலும் பள்ளிக் கல்வியை கள்ளக்குறிச்சி, திண்டிவனத்திலும், கல்லூரிக் கல்வியை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார்.
தான் படித்த பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ நூல் ஆசிரியராகவும், சென்னை சட்டக் கல்லூரியில் அறநூல் ஆசிரியராகவும், இந்து சமய அறநிலையத் துறையில் சென்னை மாகாண செயலாளராகவும், ஆணையராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.
1931- முதல் 1958 – ஆம் ஆண்டு வரை வள்ளலாரின் திருஅருட்பா மற்றும் உரைநடைப் பகுதிகளை எழுத்தெண்ணி 12 தொகுதிகளாக 3643 அடிக்குறிப்புகளுடன் ஆராய்ச்சி செம்பதிப்பாக வெளியிட்டு முழுமை செய்தார்.
80 காணி நிலத்தை வடலூர் மக்கள், வள்ளலாருக்கு தருமச் சாலை அமைக்க அட்சய வருடம் தை மாதம் 22-ஆம் நாள் சனிக்கிழமை (02/02/1867) இனாமாக வழங்கியதை முதன் முதலாக ஆதாரத்துடனும் புள்ளி விவரத்துடனும் 1932-ஆம் ஆண்டு வெளிப்படுத்தினார்.
1950-ஆம் ஆண்டு கிருபானந்த வாரியார், சத்திய ஞான சபையை திருப்பணி செய்தபோது இவர் தேர்ந்தெடுத்து தந்த திரு அருட்பாக்கள் ஞான சபையின் உள்ளும் புறமும் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 7-ஆம் நாள் புதன்கிழமை (22/10/1873) மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் நிகழ்த்திய மஹோபதேசத்தை (பேருபதேசம்) சுமார் 58 ஆண்டுகளுக்குப் பிறகு 1932-ஆம் ஆண்டு முதன் முதலாக அச்சிட்டு வெளியிட்டார். இதன் பிறகே மகாமந்திரமும், சன்மார்க்கக் கொடியும் அதன் விளக்கமும் நமக்குத் தெரிய வந்தது.
இதேபோல வள்ளலார் அகவல் எழுதியது ஆங்கீரச வருடம் சித்திரை மாதம் 8-ஆம் நாள் வியாழக்கிழமை (18/04/1872) என்பதை முதன் முதலாக உலகிற்கு அறிவித்த வரும் இவரே ஆவார்.
12/05/1938 இல் வடலூர் சத்திய ஞான சபை, சித்தி வளாகம் உள்ளிட்ட அறநிலையங்களை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தவர்.
விஜயகாருண்யம் (நாவல்) பருந்தும் நிழலும் (தொகைநூல்) பழந்தமிழரின் மணவினை சட்டதிட்டங்கள் (ஆங்கிலம்) போன்ற நூல்களின் ஆசிரியராவார்.