வேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது – நிராகரிப்புக் கோரிக்கை போராட்டம் -10 லட்சம் அஞ்சலட்டைகளை, முதல்வருக்கு வேளாளர் சாதியினர் அனுப்புகின்றனர்.

0
191

பெறுநர்
அனைத்து வேளாளர் அமைப்புகள்

வணக்கம்.

பொருள் : வேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது – நிராகரிப்புக் கோரிக்கை போராட்டம் -10 லட்சம் அஞ்சலட்டைகளை, முதல்வருக்கு வேளாளர் சாதியினர் அனுப்புகின்றனர்.


பல்லாயிரம் ஆண்டுகளாக வேளாளர் இனம் / சாதியினர், தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுக்க பரந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்திற்கான அனைத்து ஆவணங்களாக, கல்வெட்டுகள் / ஓலைச்சுவடிகள் / செப்புபட்டையங்கள் / தமிழ் இலக்கியங்களில் பாடல்கள் என வெளிப்படையாக இருந்து வருவதை அனைவரும் அறிந்திருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வாழ்ந்து வரும் பள்ளர் மற்றும் சில சாதியினர் கூட்டாக இணைந்து, தங்களுக்கு வேளாளர் பெயர் வேண்டும் என்ற கோரிக்கையை மாநில / மத்திய அரசுகளுக்கு வைத்துள்ளனர்.

இக்கோரிக்கையை நிராகரிக்கும்படி, ஏற்கெனவே பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வேளாளர் இனம் / சாதியினர், மாநில / மத்தியில் ஆண்டு வரும் ஆட்சியாளர்களை பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகின்றனர்.

மாநில அரசின் நேரடி கவனத்திற்கு இந்த நிராகரிப்புக் கோரிக்கை போராட்டத்தை கொண்டு செல்ல, எமது வேளாளர் மையம், தமிழகத்தில் உள்ள வேளாளர் அமைப்புகளுடன் இணைந்து, வரும் 6ம் தேதி 10 லட்சம் அஞ்சலட்டைகளை தமிழக முதல்வரின் பார்வைக்கு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிராகரிப்புக் கோரிக்கை போராட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து வேளாளர் அமைப்புகள், வ.உ.சி பேரவையினர் மற்றும் அனைத்து வேளாளர் உட்பிரிவு / பட்டங்களை கொண்டிருப்போர்கள் வரும் 3ம் தேதியன்று, அஞ்சலட்டையில் முகவரியோடு கோரிக்கையை எழுதி, முதல்வருக்கு தபால் மூலம் 6ம் தேதி கிடைத்திட செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். 

நன்றி

வேளாளர் மையத்திற்காக,

(அக்னி சுப்ரமணியம்)
ஒருங்கிணைப்பாளர்
27-09-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here