“மோடி இல்லையென்றால் லடாக் பகுதி ‘படாக்’ ஆகியிருக்கும்”- மதுரை ஆதீனம் அதிரடி

0
346
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

நித்யானந்தா ‘‘கை லாஸ்’’ ஆனதால் கைலாஷ் சென்று விட்டார் என, பரமக்குடியில் நடந்த விழாவின் போது மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வஉசி.யின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் ஐம்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மதுரை ஆதீனம் 293வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வஉசி சிலைக்கு மாலை அணிவித்து விழாவை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், வெள்ளாளர் சமுதாயத்திற்கு அடையாளமாக இருந்த கர்னல் பதவி பறிபோய் விட்டது. ஆகவே அதை மீண்டும் இந்த சமுதாயத்திற்கு வழங்க சமுதாயத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து போராடி பெற வேண்டும். நித்யானந்தாவால் இங்கு ஒன்றும் செய்ய முடியாமல் ‘‘கை லாஸ்’’ ஆகிவிட்டதால்தான் அவர் கைலாஷ் சென்று விட்டார். இனியும் அவரால் மதுரை ஆதீனத்தை  ஒன்றும் செய்ய முடியாது’’ என்றார்.

“நவீன ராமானுஜர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” சேகர்பாபு, நெற்றியில், “திருமண் போடுவாரா?” மதுரை ஆதீனம் கேள்வி!மசூதிகளில் (அரேபியம்) மற்றும் சர்ச்சுகளில் ஆங்கிலம் முதலியவற்றை செய்து வருகிறார்கள். அங்கும் தமிழில் செய்வார்களா என்று கேட்டார்.படிக்கும் மாணவர்கள் பாஸ்மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள், பெண்கள் ரோடில் நடமாட முடியவில்லை.மோடியின் செயலால் இந்திய எல்லைப் பகுதி பாதுகாக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் லடாக் பகுதி ‘படாக்’ ஆகியிருக்கும். விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் அது சமூக விழா, மத விழா இல்லை – மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர்!விநாயகர் சதுர்த்தி விழா என்பது, இன்றல்ல நேற்றல்ல, அன்னியர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அரசு தடை விதித்திருப்பது சரியல்ல.ஜவர்ஹர்லால் காலத்தில் காஷ்மீர் பிரச்சினை,சைனா அடிக்கடி வாலாட்டிக் கொண்டிருக்கிறான் சிவபெருமான் இருந்த கைலாசமே கைவிட்டு போய்விட்டது என்றார் மதுரை ஆதீனம்.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: