“கோயில் நிலத்தை வைத்திருந்தால் திருப்பி தந்துடுங்க.. கோயிலுக்கு செலுத்த வேண்டிய கடன் இருந்தால், அதையும் தந்துடுங்க.. இல்லாட்டி, அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளியாக பிறந்துடுவீங்க..” என்று மதுரை ஆதீனம் ஞான சம்பந்த தேசிகாச்சாரியார் சாபம் விட்டுள்ளார்… சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரை அருகில் உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது…
இதற்கான யாகப் பூஜைகள் கடந்த டிசம்பர் 9-ம் தேதி தொடங்கியது… நேற்று 2-ம் கால பூஜை முடிந்து பூர்ணாஹூதியாகி கடம் புறப்பாடு நடைபெற்றது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலியில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை மூலவர் கோயிலின் மூலவர் ஜெகதீஸ்வரர் சுவாமியின் விமான கலசத்தின் மீது, கலச நீர் ஊற்றி குட முழுக்கு விழா வெகு சிறப்பாக நடந்தது.. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசித்தனர்.. இவ்விழாவில் மதுரை ஆதீனமான ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை செயலாளர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
சொற்பொழிவு பின்னர் நடந்த பாராட்டு விழாவில் மதுரை ஆதீனம் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்… அந்த சொற்பொழிவில் அவர் பேசியதாவது: “கோயில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோயிலுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் இருந்தாலோ, அதனை விரைவில் கொடுத்து விடுங்கள். இல்லைவிட்டால், அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளி, மூஞ்சுறு எலி, வவ்வால், ஆகியவையாக பிறக்க நேரிடும்.. சிவன் சொத்து குலநாசம்.. ஏனென்றால், பலருக்கு நல்ல எண்ணங்கள் இல்லை” என்று சாபம் விடும் ரேஞ்சில் பேசினார்..
அழகு பெண் அதுமட்டுமல்ல, “நல்ல சம்பளம் அழகு இருந்தாலும் பெண் கிடைப்பதில்லை.. பெண் கிடைத்தாலும் நல்ல மாமியார் கிடைப்பதில்லை.. மாமியார் நல்லவிதமாக இருந்தால் மருமகள் சரியாக இருப்பது இல்லை” என்றும் சரமாரி பேசியிருக்கிறார். இதைவிட இன்னொரு விஷயம் பேசியதுதான் அனைவரையும் வாயடைத்து போக வைத்துவிட்டது..
சைவம் ஆதீனம் விழாவில் தொடர்ந்து பேசும்போது, “தேசிய கொடி சைவ மதத்தை சேர்ந்த கொடி. அதிலுள்ள பச்சை நிறம் அம்பாளைக் குறிக்கிறது.. சிவப்பு நிறம் செம்மேனி அம்மாளின் நிறத்தைக் குறிக்கிறது.. வெள்ளை நிறம் ரிஷபத்தைக் குறிக்கிறது. அதனால் தேசியக் கொடி என்பது சைவக் கொடியே” என்றார். இந்த பேச்சுக்கள் அனைத்தும் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.