திண்டுக்கல் சிறுமி கொள்ளப்பட்டது கண்டித்து வேளாளர் முன்னேற்ற கழகத்தினர் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்

0
447
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் வேளாளர் குடியை சேர்ந்த சத்யராஜ் – பிரியா தம்பதியினரின் 5ம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகளான 11 வயது சிறுமி பள்ளியின் கழிவறையில் எரித்தது கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த நாசக்கார செயலை கண்டித்தும் இதற்கு காரணமான கொலைகாரர்களை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே வேளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதற்கு அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் தலைமை தாங்கினார். மேலும் அந்த கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


இதில் குற்றவாளிகளை உடனே கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: