Home நிகழ்வு தமிழகம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு...

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மலர்தூவி மரியாதை..!!

0
201

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வ.உ.சி.யின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் அதன் தலைவர் சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ். மற்றும் துறைமுக ஊழியர்கள் வ.உ.சிதம்பரனாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும், சமுதாய அமைப்புகள் சார்பிலும் வ.உ.சிதம்பரனாரின் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது.

NO COMMENTS

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

%d bloggers like this: