அது என்ன சித்திர மேழி திருவிழா!?
முதலில் சித்திர என்ற சொல் தமிழ் சொல்லே கிடையாது.
சித்திர என்ற சொல் சமஸ்கிருத சொல்.
சித்திர = மதி, அழகிய அல்லது பொன் என்று பொருள்படும்.
மேழி = கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும்.
வைபவம் = திருவிழா என்று பொருள்.
அதாவது தமிழில் “பொன் ஏர் பூட்டும் திருவிழா” என்று அழைக்கப்படும்.
சங்க இலக்கியத்தில் மற்றும் சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா சிறப்பாக கூறப்படும்.
சிலப்பதிகாரத்தில் ஏர்மங்கலம் என்ற தலைப்பில் ஒரே பாடலே தனியாக இருக்கும்.
பொன்ஏர் என்றும் மதிஏர் என்று அழைப்பார்கள்.
தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல் நாளில் அரசன் உழவை தொடங்கி வைப்பான்.
இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் தான் உழவன் என்றும் அதன் பிறகே அரசன் என்பதை பறைசாட்டுவதே ஆகும்.
இதை திருவள்ளுவர் அழகாக கூறுவார்:
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்”
என்ற குறள் மூலம் உழவனை தொழுதுதான் மற்றவர்கள் உண்ண வேண்டும் என்று கூறுகிறார்.
இந்த சித்திர மேழி வைபவம் மகத பேரரசின் தலையாய அரசு விழா-வாக கொண்டாடினார். இதை நமது இலக்கியங்களில் மட்டுமில்லை புராணங்களிலும் பார்க்கலாம்.
சூரிய குல க்ஷத்திரியர் ஜனக மாஹராஜவால் இதே போல் சித்திரை முதல் நாள் பொன்னேர் பூட்டி உழும் போது சீதா தேவி பூமிக்கு அடியில் இருந்து கிடைப்பால். ஆகையால் தான் சீதாவை பூதேவி மகள் என்று கூறுவார்கள்.
இந்த நிகழ்வு இந்தியா முழுவதிற்கும் காணக்கூடியதாகும். ஆனால் இன்று இந்த விழாவையும் மறந்து விட்டார்கள் உழவனையும் மறந்து விட்டார்கள்.
முதலில் தான் உழவன், பிறகுதான் அரசன் என்று கூறி அரசன் நடத்தும் விழாவை இன்று வரை கம்போடியா அரசு செய்து வருகிறது.
இவ்வளவு பெருமை வாய்ந்த சித்திர மேழி வைபவத்தை தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!