1994ம் ஆண்டு, முதற்பதிப்பாக ஐயா ஆ.இரா.வேங்கடசலபதி அவர்கள் எழுதிய ஆய்வு நூலான திராவிட இயக்கமும், வேளாளரும் (1927-1944), முழுமையாக எப்படி வேளாளர்களால் திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்தது என ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.
அப்படியிருந்த அந்த திராவிட இயக்கம், இன்று வந்தேறிகளின் பிடியில் சிக்குண்டுள்ளதை யாராலும் மறுக்க இயலாது.
திரு. ஈ.வே.ரா-விடம் எப்போது அமைப்பு மாற்றப்பட்டதோ, அன்றையிலிருந்து வந்தேறிகள் கொஞ்சம், கொஞ்சமாக திராவிட இயக்கத்தை தங்கள் பிடியில் மடைமாற்றம் செய்யும் வேளை துவங்கியது எனலாம்.
அது கட்சியாக மாற்றப்பட்ட பின்னர், திரு. கருணாநிதி – யின் தலைமைக்கு வந்ததலிருந்து அதிவேகமாக வந்தேறிகளை உள்வாங்கியே வந்ததன் விழைவு, நூற்றாண்டுகளில், இப்போது மொத்தமாக தமிழரல்லாத, ஆனால், தமிழ் பேசும், வந்தேறிகளின் பிடியில் உள்ளது. திராவிட இயக்கம் பல கட்சிகளாக பிரிந்து, தி.மு.க – அ.தி.மு.க – தே.மு.தி.க என்பதாக இருந்தாலும், அத்தனை கட்சிகளும் இப்போது, வந்தேறி தலைமை கட்டுப்பாடுகளில் இருப்பதை காணக்கூடியதாகவே இருக்கிறது.
தற்போது, ஆட்சியிலிருக்கும் ஐயா எடப்பாடியார் தலைமையில் தமிழர் ஆட்சி என்றாலும், அந்த கட்சியை மறைமுகமாக இயக்கும் பங்கு, வந்தேறிகளில் கைகளில் சிக்கியிருப்பதை பார்க்க முடிகிறது. அ.தி.மு.க-வை தவிர அனைத்து கட்சிகளும் என்னதான், வேளாளர்கள் முன்னிலையில் இருந்தாலும், வந்தேறிகளின் கட்டுப்பாட்டி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆட்சி செய்துவரும் அ.தி.மு.க தலைமை இதை புரிந்து கொண்டு, வந்தேறி சக்திகளை இனி வரும் காலங்களில் உடைத்து, வெற்றி பெற வேளாளர் மையம் வாழ்த்துகிறது. இது அவர்களால் முடியும் என்பதை தெளிவாக காட்டுகிறது. திரும்பவும், வேளாளர் துணையோடு, தமிழர்களின் நல்லாட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பதுதான், ஒட்டு மொத்த உலகத் தமிழர்களின் விரும்பம்.
- வேளாளர் மையம்