தமிழர்களின் போர்கருவிகள் ஆயுதங்கள் வரிசையில்… – வேளாளர் ஆயுதங்கள்!

0
1282
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

சித்திர மேழி கல்வெட்டுகள் இந்தியா முழுவதும் 200க்கு மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன இன்னும் கிடைத்து கொண்டு வருகின்றன.

இது போன்ற கல்வெட்டுகளில் வேளாளர்கள் பயன்படுத்திய போர் ஆயுதங்கள் செதுக்கப்பட்டு இருக்கும். அதில் மற்ற ஆயுதங்கள் பொதுவான ஆயுதங்களே. ஆனால் இந்த “சக்ராயுதம்” தனித்துவம் வாய்ந்தது ஆகும்.

இந்த “சக்கராயுதம்” வேளாளர் மட்டுமே தென்னாட்டில் இதனை பயன்படுத்தி உள்ளனர். வேறு இனத்தவர் பயன்படுத்தியதர்கான சான்றுகள் ஒன்று கூட இல்லை.

வடக்கே ராஜ புத்திரர் பயன்படுத்தி உள்ளனர் என ஒன்று இரண்டு சான்றுகள் கிடைக்கின்றன. கிடைத்தாலும் அவை சித்திர மேழி கல்வெட்டுகள் காலம் பின் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டுகளே.

சித்திர மேழி கல்வெட்டுகளில் இவற்றை சக்கராயுதம் என்றும் சுதர்சனம் என்றும் குறிப்பிட படுகின்றது.

ஆயுதத்தின் சிறப்பு:

சக்கராயுதத்தை பற்றி கிடைக்கும் தரவுகள் இந்த ஆயுதம் ஒரு ஆபத்தான உயிர் பறிக்கும் ஆயுதம் என தெரிகிறது.

இந்த ஆயுதம் போர்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. போர்களில் கிடைமட்டமாக ஆகாயத்தை நோக்கி எதிரியின் பக்கம் எரிந்தால் போதுமானது மேலே சென்ற சக்கரம் இரங்கும் போது மூன்று மடங்கு பலத்துடன் எதிரியை வெட்டும்.

இந்த ஆயுதத்தை எதிரில் நிற்கும் எதிரி முகத்தில் செங்குத்தாக எறிந்தால் எதிரி முகத்தை இரண்டாக பிளந்து சென்றுவிடும்.

இந்த ஆயுதத்தை கிடைமட்டமாக வீசும் போது வெகு தொலைவில் உள்ள எதிரியின் தலை துன்டித்து விடலாம். உடலின் வேறுபகுதிகளில் பட்டால் அயுதம் அப்பகுதிகளில் புதைந்து விடும்.

அதாவது ஆழமாக சொரிகி கொள்ளும். பாய்ந்து செல்லும் ஆயுதம் எதிரி மீது பட்டால் போதும் அப்பகுதியை சீவி சென்றுவிடும்.

இந்த ஆயுதத்தில் கடுமையான பாம்பின் விசம்,சென்நாய் உமிழ் நீர் போன்ற விஷங்கள் தடவி வீசுவர்.

கள்ளர்,மறவர்,முத்தரையர்,வேட்டுவர்.போன்றவர்கள் தங்கள் ஆயுதம் எனக் கூறும் வளரி வேட்டைக்கு பயன்படுத்தபடும் ஆயுதமாகும். இதனை யாரும் உரிமை கோருவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால் இதனை தங்கள் ஆயுதம் என உரிமை கோரி வருகின்றனர்.

சக்கராயுதம் முழுக்க முழுக்க வேளாளர்கள்க்கு மட்டுமே சொந்தமான ஆயுதம் என்பதற்கு பல கல்வெட்டு சான்றுகள் கிடைக்கின்றது.

பயிற்சி முறை:

சக்கராயுதம் பயிற்சியில் கரும்பை நட்டுவைத்து வீசிபழகுவர். பிறகு வாழைமரம் பிறகு பலமான மரம்.

வேளாளர்க்கு என தனித்துவம் வாய்ந்த ஆயுதம் இந்த சக்கராயுதம் ஆகும்.

வேளாளர்களின் தனித்துவம் வாய்ந்த ஆயுதமான இந்த “ஆழிசக்கரம்” இதனை பற்றி இந்தி வரலாற்று ஆய்வாளர்கள் பல கருத்துக்களை தந்துள்ளனர். அதன்படி அரச குடும்பத்தை சார்ந்த போர்குடியினர் இது போன்ற நூதன ஆயுதங்களை பயன்படுத்துவார்கள் என்கின்றனர்.

பல்வேறு எடை, அளவுகளில் காணப்படுவதால் தங்களின் பலம் பயிற்ச்சிக்கு தகுந்தார் போல் செய்து பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆழிசக்கரம் வட நாட்டில் கிடைத்ததை விட தென்னாட்டில் கிடைத்தவைகள் அளவில் பெரியதாகவும் எடை அதிகமானதாகவும் காணப்படுகிறது.

நமது” சோழர் சிவபிரகாஷ் ” அவர்கள் தனது ஆய்வு கட்டுரையில் பின்வருமாறு கூறுகின்றார் :

இந்த ஆயுதத்தை ஆழிசக்கரம் என்றும் பரமசத்திரியர்கள் மட்டும் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறுகிறார். மேலும் இது திருமாலின் சக்ராயுதம் போன்றது வேளாளர்களுக்கு என்று கூறுகிறார்.

சித்திரமேழி கல்வெட்டு :

இது திருச்சியில் கிடைத்த சித்திர மேழி கல்வெட்டு இதில் வேளாளர்கள் பயன்படுத்திய போர் ஆயுதங்களின் புடைப்பு சிற்பம் இதில் காணப்படுகிறது. வீரவாள்,வீச்சருவா,சுருள்வாள், ஆழிசக்கரம், வீரசங்கு, வெண்குடை, பூரண கும்பம், கொடி போன்ற 8 வகையான ஆயுதங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

வேளாளர்கள் கல்வெட்டில் இதுபோன்று ஆயுதங்கள் செதுகப்பட்டிருப்பதை பார்கும் போது இவர்கள் போர்தொழிலை தங்கள் வாழ்வியலாக கொண்டவர் என்று தெரிகிறது. இந்த கல்வெட்டில் ஆழிசக்கரம் தெளிவாக தெரிவதை காணலாம்.

வேளாளர்கள் இதுபோன்ற நூதன போர்கருவிகளை பயன்படுத்தியது பார்க்கும் போது இவர்கள் ஆயுதம் கொண்டு போர்புரிவதில் உச்சநிலையை அடைந்திருந்தனர் என தெளிவாக தெரிகிறது.

இன்று தமிழ் நாட்டில் ஆண்ட பரம்பரை போர்குடி என சொல்லும் பல சமுகத்தினர்க்கு இது போல் ஆயுதங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கூட இல்லை.

வேளாளர்க்கு மட்டுமே பல கல்வெட்டுகள் இருக்கிறது காரணம் உண்மையான போர்குடி வேளாளர் என்பதால் மட்டுமே மேற்குறிப்பு:

வீடியோவில் நாம் பார்க்கும் காட்சி ஒரு ராஜ புத்திர வீரர் ஆழிசக்கரத்தை பயிற்ச்சி செய்யும் முறை. இவர் பயன்படுத்துவது தற்காலத்தில் எடை,கனம் குறைவாக வடிவமைக்கபட்டது.

பழைய ஆயுதம் எடை, கனம் அதிகமாக இருந்துள்ளது. மேலும் இதனை விலங்கு தோலால் செய்யப்பட்ட கைஉறை (அ) கைபிடிப்பான் பயன்படுத்தி இருகபிடித்து வேகமாக வீசுவர். காரணம் சுற்றுபகுதி அதிக கூர்மையானவை.

பதிவு : Thamu Thamu

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: