காணிப் பாடல்கள்-காணி – ஒரு பார்வை(சமஸ்தானத்தில் காணி ஊர்கள்: காணி காமுண்ட (காணி காமிண்டன் [கவுண்டன்], காணியாள கவுண்டர்))

0
447
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

கொங்கு வேளாளர் சமுதாய வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிப்பது குலங்களே. குலங்களைக் கூட்டம், கோத்திரம் என்றும் அழைப்பர். மூன்றும் ஒரே பொருள் தருவன. குலக்காணி, குலதெய்வம், குலகுரு குலப்புலவர் எனக் குலத்தில் அடையாளத்தோடு அழைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.அறிமுகம் ஆகாத இரு கொங்கு நண்பர்கள் சந்திக்கும் போது அநேகாகக் கேட்கும் முதல் கேள்வி ‘நீங்க என்ன கூட்டமுங்க’ என்பதாகத்தான் இருக்கும்.
ஒரே கூட்டமாக இருந்தால் வயதிற்கேற்ப தந்தை-மகன்; அண்ணன்-தம்பி உறவு கொண்டாடுவதும், வேறு கூட்டமாக இருந்தால் மாமன், மைத்துணனாக உரிமை கொண்டாடுவதும் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கேயுள்ள தனிப்பண்பாட்டு அடையாளமாகும்.திருமணத்திற்கு மணமக்களோ, மணமகனோ தேடும் போது முதலில் விசாரிப்பது குலத்தைப் பற்றியே. ஒரே குலத்தில் பெண் எடுப்பதும், கொடுப்பதும் கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை. அயல் குலத்திலேயே திருமண உறவு கொள்வர்.

காணி – ஆட்சி

ஒவ்வொரு குலங்களுக்கும் காணியூர்கள் வகுக்கப்பட்டன. இதனைப்பட்டயம் நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்கடி பன்னீராயிரம் என்றும் “குல கோத்திரங்கள் பிரித்து நாடு 24 நாட்டார் என்றும் இந்தக் குலங்களை ஊருக்கெல்லாம் குல தெய்வங்களும் காணி பூமிகளும் பிரித்து” என்று கூறுகிறது. ஒரு குலத்துக்குச் சொந்தமான உரிமையுடைய ஊர் காணி எனப்படும். காணி என்ற சொல்லுக்கு ஆட்சி, அனுபவிக்கும் உரிமை என்று பொருள். ஓர் ஊர்க் காணியுடையவர் காணியாளர் அல்லது காணியாளக்கவுண்டர் எனப்படவார்.

ஒரு குலத்துக்குச் சொந்தமான உரிமையுடைய ஊர் காணி எனப்படும். காணி என்ற சொல்லுக்கு காணியாளர்கள் அந்த ஊரை நிர்வாகம் செய்வர். வரி வசூல் செய்து அரசு அதிகாரிகளுக்குச் செலுத்துவர். கோயில் முதல் உரிமை பெறுவர். எல்லாக் குடிமக்களையும் ஏவல் கொள்ளும் உரிமை அவர்கட்கு உண்டு. இதனை முகுந்த நல்லூர்ப் பட்டயம் பின்வருமாறு கூறுகிறது

“ஆண்ட சொர்னாதாயம் நஞ்சை புஞ்சை பட்டி தொட்டி மாவடை மரவடை புறகூலி பிறமுதல் அணை அச்சுக்கட்டு மக்க மகமை சுங்கம் சோதினை எல்லை கொல்லை இதுவெல்லாம் செல்லும் சதுர்பூமியை மரியாதைக்குள்ள விபூதி பிரசாதம் பச்சடம் பாக்கு இதுவெல்லாம் செல்லும் சதுர்பூமியை மரியாதைக்குள்ள விபூதி பிரசாதம் பச்சடம் பாக்கு வெத்திலை இதுவெல்லாம் முதலானது கொடுத்து” காணி பெற்றதைக் கூறுகிறது.

கோயில் காணியுடைய சிவப்பிராமணர், தச்சாசார்யக் காணியுடைய ஆசாரியர், பாடவ்யக் காணியுடைய நாகபாசத்தார்” என்று காணிகள் பலவகைப்படும்.

குலங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

குலங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. முன்பு கொங்கு வேளாளர் குலங்கள் 60 என்றனர். கொங்கு காணியான பட்டயம் கொங்கு வேளாளர் குலங்கள் 124 என்று கூறுகிறது. .பரமயணப்புலவர் பாடிய ஓதாளர் அலகுமலைக் குறவஞ்சி 142 குலங்களைக் குறிக்கிறது. குலங்களின் பெயர்கள் தனியாகவும் தொகுத்தும் பல இடங்களில் கூறப்படுகிறன்றன. எ பெரும்புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக்கவுண்டர் தேடிக்கண்டுபிடித்த 96 கீர்த்திப்பாடல்.எ சின்னத்தம்பி நாவலர் ஓதாளர் அலகுமலைக் குறவஞ்சி.எ முதலிபாளையம் மகாவித்துவான் நாச்சிமுத்துப் புலவர் பாடிய வேளாளர் குலகும்மி,எ தம்மரெட்டிபாளையம் நாச்சிமுத்துப் புலவர் வீட்டில் கிடைத்த கொடுமணல் இலக்கியங்கள் ஏடு.எ கொங்கு வேளாளர்களின் கல்வெட்டு, செப்பேடு.எ மூன்று கொங்குமண்டல சதகங்கள்.அனைத்தையும் தொகுத்து அகரவரிசைப்படுத்தியதில் குலங்களின் எண்ணிக்கை 214 வருகிறது.

96 கீர்த்திப் பாடலில் சில குலங்களின் பெயர் ஐயத்திற்கு இடமாக இருந்தாலும் ஆவணத்திற்கு மதிப்பளித்து அவைகளும் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. செப்பேடு கல்வெட்டுக்களில் வேறு எங்கும் காணப்பெறாத பல குலப்பெயர்கள் வருகின்றன. அளிக்கப்பட்டுள்ள விளக்கப் பட்டியலில் அவைகளைக் காணலாம். சுமார் 30 குலங்களே ஆறு ஆவணங்களிலும் முழுமையாக இடம் பெற்றுள்ளன. குலங்களின் வீழ்ச்சி, மறைவு, தொடர்ச்சி ஆகியவைகளைப் பட்டியல் காட்டுகிறது.குலங்களின் பெயர்களைமுனைவர் கிருஷ்ணசாமிடி.எம்.காளியப்பாபுலவர். வி. இராமமூர்த்திநல் நடராசன்புலவர் தே.ப.சின்னுசாமிபுலவர் இரா. வடிவேலனார்கு. சேதுராமன்முனைவர் திலகவதி பழனிசாமிஇரா. இரவிக்குமார்கே.எஸ்.மோகனசுந்தரம்கவிஞர் சிவதாசன்.ஆகியோர் தொகுத்துக் கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.குலங்களின் பெயர்காண்பதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. அலகுமலைக் குறவஞ்சியைப் பாடுவித்தவள்ளல் ஓதாளர் குலத்தைச் சேர்ந்தவர். அந்நூலில்தான் குலப் பெயரைத் தொகுத்துக் கூறும் பாடல் வருகிறது.

                                 “பொன்னார் ஓதாளர் பூசர் செம்பூதர்”

என்று அந்த நீண்ட அகவல தொடங்குகிறது. ஆய்வாளர் ஒருவர் பொன்னர் வந்தால் தம்பி சங்கர் வரவேண்டும் என்று நினைத்துள்ளார். அந்த முதல்வரியை, பொன்னர் சங்கர் பூசர் செம்பூதர் என்று மாற்றிப்பதிப்பித்தள்ளார். அப்பாடலைப் பாடுவித்த ஓதாள குலமே அப்பாடலில் இல்லை என்பதுதான் வியப்பான செய்தி.அலகுமலைக் குறவஞ்சி மூல நூலைப் பார்க்காமல் மேற்கண்ட நூலைப்பார்த்த பல ஆய்வாளர்கள் ஓதாளருக்குப் பதில் தம்பி சங்கர் என்பதைக் குலப் பெயராகச் சேர்த்துள்ளனர். ஒரவர் அப்பெயரை கல்வெட்டில் கண்டதாகவும் கூறுகிறார்.ஒரு நூலில் பூச்சந்தை என்ற பெயர் பிழையாக நச்சந்தை என்று அச்சாகி விட மற்றொருவர் அதைப்பார்த்து நச்சந்தையை தனிக்குலமாக்கி நான்கு ஊர்களையும் காணியாகக் கொடுத்துக் காணிப்பாடலாகத் தனிப்பாடலும் பாடிவிட்டார். பொருளந்தை பொருள்தந்தான், பேரிழந்தான், பெரழந்தை, பிறளந்தை, முழுக்காதன் அனைத்தும் ஒரே குலம். கல்வெட்டும், செப்பேடம் முழுக்காது பொருளந்தை என்றே கூறுகிறது. ஒரே கூட்டத்தை நான்காகக் கொண்டுள்ளனர். காடை, காடான்,சாகாடை மூன்றும் ஒரே குலம்தான். இதனையும் மூன்றாகக் கொண்டு எழுதியுள்ளனர். வெண்டுவன் கூட்டத்தை வெண்டு உழவர் என்று டி.எம்.காளியப்பா கூறுவார். சாத்தந்தை, கண்ணந்தை, பொருளந்தை என்பதை சாத்தாந்தை, கண்ணாந்தை, பொருளாந்தை எனக்கொண்டு ஆந்தை குலத்தோட தொடர்புபடுத்துவர் சிலர். இக்குழப்பங்களைத் தெளிவுபடுத்தினால் தனி நூலாகவே அமையும். மாதிரிக்காக இரண்டொன்றை மட்டும் காட்டப்பட்டது.

இதுவரை 40 குலங்களுக்குக் காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன

இதுவரை 40 குலங்களுக்குக் காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன. அவை கொங்கு வேளாளப் பெருமக்களால் நன்கு ஆதரிக்கப்பட்ட புலவர்களால் பாடப்பட்டவை. அப்பாடல்களில் இந்தக் காணியூர்களைக் காணியாளர்கள் ஆட்சி செய்வதாகவே கூறப்படுகின்றன.

“அரசுபுரி காணியிவையே”“இவை பதியில் அரசுபுரியும்”“பொன்னின்மேழிக்கதிபர் பூமி பாலகரானவர் புகழ்பெருகு காணியி வையே”

என்ற பகுதிகள் அதனை விளக்கும். கொங்கு வேளாளர் காணி என்பது ஊரின் முழு உரிமையுடையதாகும்.இந்தக் காணிப்பாடல்கள் இரண்டு விதமான அமைப்பில் காணப்படுகின்றன. ஒன்று குலப்பெயரைக் கூறி அக்குலத்தார் காணியுரிமை கொண்ட ஊர்களைத் தொகுத்துக் கூறுவது. மற்றொன்று ஒரு குலத்தில் தோன்றிய ஒரு தலைவரைக் கூறி அவர் இக்குலத்தின் இந்த ஊர்களுக்கெல்லாம் காணியுரிமையுடையவர் என்று கூறுவது

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: