தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் – முதல்வர் அறிவிப்பு!

0
181

உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சாதி வாரியாக இடஒதுக்கீடு வழங்குவதற்கு, முதலில் மாநிலம் முழுவதும் சாதி வாரியாக கணக்கெடுப்பு முக்கியம் என்பதாலும், அதன் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69% இடஒதுக்கீடு வழக்குக்கு தேவையான புள்ளிவிவரங்களை சமர்பிக்க முடியும் என்பதாலும் உரிய தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்பிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதல்வர் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாட்டில்‌ 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச்‌ சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து, தமிழ்நாட்டின்‌ சமூகநீதி வரலாற்றில்‌ நீங்கா இடம்‌ பிடித்து, “சமூக நீதி காத்த வீராங்கனை” என்று அனைவராலும் போற்றப்படுகின்றார்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here