Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

பாண்டிய வேளாளர்களின் இதயம் எது என கேட்டால், அது பழநியில் உள்ள பாண்டிய வேளாளர்களின் மடத்தை நோக்கி அனைத்து பாண்டிய வேளாளர்களின் ஆள்காட்டி விரல் சொல்லும்.

இப்போதுள்ள இந்த பாண்டிய வேளாளர்களின் மடம் என்பதன் வயது தெரியுமா என அதே பாண்டிய வேளாளர்களை பார்த்து கேட்டால், பலரும் அமைதி காப்பார்கள்.

ஆம், இப்போதுள்ள பாண்டிய வேளாளர்கள் மடம் 120 வருடங்களை கடந்து நிற்கிறது. ஆனால், கர்வத்துடனும், கம்பீரமாகவும் நிற்க வேண்டிய நமது மடம், சமகாலத்தில், நீதிமன்ற வாசலில் நிற்பது, அனைத்து பாண்டிய வேளாளர்களின் இதயத்தில் ஓட்டை விழுந்ததுபோல், கவலையுடன் காணப்படுவதை பார்க்க முடிகிறது. நூற்றாண்டுகளை கண்டு வந்த, பாண்டிய வேளாளர்களின் மடம், நீதிமன்ற கதவை தட்டியதாக வரலாறுகள் இல்லை. ஆனால், இப்போது சில ஆண்டுகளாக, இதன் நிலை வேறாக இருப்பது, பாரம்பரியம் மிக்க பாண்டிய வேளாளர்களின் மனக்கவலைகளில் வடுவாகி பிரதானமாக இருந்து வருகிறது.

இப்போதுள்ள பாண்டிய வேளாளர்களின் மடம் என்பது மூன்றாவது மடம் என்பது பல பாண்டிய வேளாளர்களுக்கே ஆச்சரியம் தரும் செய்தியாகும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை என்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ் சித்தர் போகர் அங்குதான் வாழ்ந்தார் என்பதும் அனைத்து உலகத் தமிழர்களுக்கும் தெரிந்த செய்தி. அப்படிப்பட்ட பெருமைமிக்க போகரால் தோற்றிவிக்கப்பட்டதே, இன்றும் பழநி மலை மேல் உள்ள பாண்டிய வேளாளர் சமுதாயத்திற்குட்பட்ட தண்ணீர் பந்தல் மடம். இந்த மடத்தினுள்ளே ஒரு சிறு கோயிலும் இன்று வரை இருந்து வருகிறது. இதை பார்த்தாலே, பாண்டிய வேளாளர்களின் ஆதிகால தொண்மை புரிந்து கொள்ள இயலும்.

பாண்டிய வேளாளர்களுக்கென்று பல நூற்றாண்டுக்கு முன் அமைந்த முதல் மடம், இன்றும் பார்க்கலாம் என்றால், அப்படியா என ஆச்சரியத்துடன் பார்ப்பவர்கள் உள்ளார்கள். அந்த மடம் ஆரிய சூழ்ச்சியால், “குழுமத்தார் மடம்” என்று பெயரை தாங்கிக் கொண்டு, பழநி பெரிய நாயகியம்மன் கோயில் தெருவில் உள்ளதை இப்போது பார்க்கலாம்.

இரண்டாவது மடம், 19ம் நூற்றாண்டில், பழநி அடிவாரத்தில் பாதியளவு, பல ஏக்கரை கொண்டு, இன்றும் தென்னிந்திய பாண்டிய வேளாளர் மடம் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மடம் பழைய ஆயக்குடி பாண்டிய வேளாளர் சமுதாய சொந்தங்கள் கையில் இப்போதும் இருந்து வருகிறது. சித்தநாதர் கடை என்றால், இப்போதுள்ள தென்னிந்திய பாண்டிய வேளாளர் மடம் இருக்கும் இடம் தெரிந்து கொள்ள எளிமையாக இருக்கும்.

காந்தி ரோட்டில் இப்போதுள்ளது மூன்றவது பாண்டிய வேளாளர்களின் மடம் 86 சென்ட்டுகளை கொண்டதாகும். இந்த மடத்தின் தோற்றம் என்பதை தேடினால், மே மாதம் 23ம் தேதி, 1893ம் ஆண்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக சொல்கிறது. அப்படியெனில், இந்த மடம் 120 ஆண்டுகளான பாரம்பரிய பெருமை மிக்க மடம் என்பதில் சிறிதளவு ஐயமில்லை. இந்த மடத்தின் அனைத்து உரிமைகளும் 28 ஊர் பாண்டிய வேளாளர்களுக்கே சொந்தமானது. ஆதாவது, முதல் மற்றும் இரண்டாவது மடங்கள் சிக்கலினால், அப்போதிருந்த பாண்டிய வேளாள சமுக பெரியவர்கள், காந்தி ரோட்டில் இப்போது அமைந்துள்ள மடம், பழநி அருகில் அமைந்துள்ள 28 ஊர்களில் வாழும் பாண்டிய வேளாள மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதற்காக, மாங்கல்ய வரி என்பதை புதிதாக உருவாக்கப்பட்டு, இன்று வரை அது நடைமுறையில் இருந்து வருகிறது.

பாரம்பரிய மிக்க பாண்டிய வேளாளர்களின் மடங்களில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது மடங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது என்றாலும், சிக்கல்களில் தொடர்ந்து பிரச்சனைகளிலும் சிக்கி தவித்து, இன்றுள்ள மூன்றாவது மடம் மதுரை உயர்நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கிறது என்ற செய்தி பாண்டிய வேளாளர்களின் இதயத்தில் உள்ள ஓட்டையை கிழித்து இரத்தம் வழிந்து கொண்டு, தீர்க்கப்படாத வலியாக இருந்து வருகிறது.

நூற்றாண்டு கண்ட பாண்டிய வேளாளர் மடம் :
பழனி பாண்டிய வேளாளர் மடம் (காந்தி சாலை) – (28 ஊர்களின் பாண்டிய வேளாளர் குலத்திற்கு சொந்தமானது)
பழனி பாண்டிய வேளாளர் மடம் தோற்றமும், அதன் நூற்றாண்டு தலைவர்கள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்த ஒரு பார்வை.

அக்னி சுப்ரமணியம்
வேளாளர் மையம்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

1 COMMENT

  1. பாண்டிய வேளாளர் வரலாறை நாம் வெளிகொண்டு வருவோம்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: