கவிஞர் இளையபாரதி மற்றும் தினமணி திரு. சரவணன் அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!

0
451
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாளரான கவிஞர் இளையபாரதி, 15க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியும், 500 மேற்பட்ட நூற்களை வ.உ.சி நூலகம் என்னும் பதிப்பகத்தின் வாயிலாக பதிப்பித்தும் உள்ளார். இவர் இயல், இசை, நாடக மன்ற செயலாளராக 2006 முதல் 2011 வரை பதவியினை வகித்துள்ளார்.

வேளாளர் மையத்தின் நண்பரும், தினமணி நாளிதழின் முக்கிய பதவியில் இருந்து வரும் வேளாளரான திரு. சரவணன் அவர்கள், கவிஞர் இளையபாரதியை நமது அலுவலகத்திற்கு நேற்று (08-12-2021) அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்து உரையாடிச் சென்றார்.

கவிஞர் இளையபாரதி அவர்கள் பதிப்பில் அரசியல் தலைவர்களின் நூல்கள் பல வெளியிடப்பட்டுள்ளது. அப்படி வெளிவந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் – விடுதலைப் போராட்ட வரலாறு என்ற 1,300க்கும் பக்கங்களுக்கும் மேல் உள்ள நூல் ஒன்றினை எங்களது வேளாளர் மையத்திற்கு அன்பளிப்பாக அளித்தார்.

மேலும் பேசுகையில், அவர், ஐயா வ.உ.சி அவர்களின் 150-வது ஆண்டு நினைவாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக தான் சேகரித்து வைத்துள்ள, ஐயாவின் அரிய பொக்கிசங்களை கொண்டு,  2,000 மேற்பட்ட பக்கங்களுடைய, ஐயாவின் கையெழுத்து பிரதிகளோடு அச்சிட போவதாக சொன்னார். அவருக்கு, நமது “வேளாளர் மையம்” வாழ்த்து சொன்னதோடு, அனைத்து வித ஒத்துழைப்பையும் நல்கும் என உறுதி மொழி கொடுக்கப்பட்டுள்ளது.

அக்னி சுப்ரமணியம்
வேளாளர் மையம்
உலகத் தமிழர் பேரவை

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: