ஒரு சுதேசியின் வித்யாசமான உயில்…!!! வ.உ.சியின் வறுமை நாட்கள்

0
665
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

ஒரு சுதேசியின் #வித்யாசமான_உயில்…!!!

ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம் பிள்ளை 4 ஆண்டுகாலம் சிறை வாசத்திற்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலையாகிறார். சிறை வாசலில் சுப்பிரமணிய சிவா உள்பட குடும்பத்தினர் மட்டுமே வந்திருந்தனர்.ஆங்கிலேய அரசு அவர் வக்கீல் தொழிலில் ஈடுபட தடை விதித்தது. அவரின் கடைசி காலம் பற்றி கேட்டால் கண்ணீர் வரும். அடுத்த நேரம் உணவுக்கே திண்டாடினார்.சென்னையில் மயிலாப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். வீட்டுக்காரர் வாடகையை உயர்த்தி கேட்டதால் அங்கிருந்து பெரம்பூருக்கு மாறினார்.குறைந்த வாடகைக்கு வீடு சுடுகாடு பக்கமே கிடைத்தது. அதனால் சுடுகாட்டுப் புகை அவரை மிகவும் பாதித்தது. அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு மாறினார்.ஒரு பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் தனது கடைசி கால வயிற்றுப் பிழைப்புக்காக சென்னையில் அரிசி கடை , மளிகை கடை , மண்ணெண்ணெய் கடை என வியாபாரம் செய்து வந்தார்.இந்த சூழ்நிலையிலும் வ.உ.சிக்கு தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்கள் கொடுத்து அனுப்பிய 5000 ரூபாய் பணத்தை காந்தி வ.உ.சியிடம் கொடுக்கவில்லை. ஏழ்மையில் வ.உ.சி கஷ்டப்படுவதைக் கேள்விப்பட்ட பாலகங்காதர திலகர் மாதந்தோறும் வ.உ.சி.க்கு 50 ரூபாய் அனுப்பி வைத்தார் .வாழ்வின் கடைசி நாள் சாகும் தறுவாயில் தேவாரம் , திருவாசகம் கேட்கலாமே என்று அவருக்குத் தோன்றவில்லை. மரணத்தை எதிர்பார்த்த அவர் அங்கிருந்தவரிடம் பாரதியின் ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” பாடலை பாடச் சொன்னார். பாடலைக் கேட்டுக் கொண்டே அவரின் உயிர் பிரிந்தது.எல்லோரும் சேர்த்து வைத்த சொத்தை யார் யாருக்கு சேரவேண்டும் என்பதாக உயில் எழுதி வைப்பார்கள். வ.உ.சி. எழுதிய உயில் வித்தியாசமாக இருந்தது.எந்தவிதமான சொத்துக்களும் இல்லை என்பது மட்டுமல்ல தான் யார்யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என எழுதியிருந்தார். வீட்டு வாடகை பாக்கி ரூ.135, துணிக்கடை பாக்கி ரூ.130 , எண்ணெய்க்கடை பாக்கி ரூ.30, சில்லரைக்கடன் ரூ.50 , தனி நபர் கடன் ரூ.80 என்பதாக எழுதி வைத்திருந்தார்.நாட்டிற்க்காக குடும்பத்தையும் சொத்துக்களையும் இழந்த தியாகிகளைக்கொண்டாடாமல் வேதசாரிகளையும் பதவிப்பித்தர்களையும் தேசத்தலைவர்களாக கொண்டாடியது காங்கிரஸ். என்னைப்பொறுத்தவரை இவரும் நம் தேசிய கடவுள் தான்!!

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: