சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், நேற்று (21-09-2020) பகல் 2.30 மணிக்கு “வேளாளர் பெயரை பள்ளர்களுக்கு கொடுக்க கூடாது” என்ற ஒற்றைக் கோரிக்கையோடு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வேளாள பெருமக்கள் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
சென்னை முழுக்க கொரோனா தடை சட்டம் இருந்த போதும், வேளாளர்களின் உயிர் பிரச்சனையாக, “வேளாளர் பெயரை பள்ளர்களுக்கு கொடுக்க கூடாது” என்பதாக கருத்தினால், வேளாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒன்று கூடி நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை வேளாளர் மையம் ஒருங்கிணைத்திருந்தது.
ஆர்ப்பாட்ட தொடக்கத்தில், விண்ணை முட்டுமளவில், வேளாளர்கள் பெயரை தாரை வார்க்கக்கூடாது என முழக்கமிட்டது, சாலையில் செல்வோர் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்குடி நட்பு சாதிகளான மறவர், பறையர் போன்ற அமைப்புகளிலிருந்து தலைவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக பறையர் இனத்திலிருந்து திரு. ஏர்போட் மூர்த்தி பங்கெடுத்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்ச்சியில் சென்னையிலிருந்து பல்வேறு வேளாள அமைப்புகள் இதில் பங்கு கொண்டன. வ.உ.சி பேரவைகள், முதலியார் சங்கத்தினரும், வீரகுடி வெள்ளாள சங்கத்தினரும், சித்ரமேழி வேளாள பேரவையினரும், VMK சங்கத்தினர்களும், என பல்வேறு தரப்பினர் பங்கெடுத்து கொண்டிருந்தனர்.
திருச்சியிலிருந்து சோழிய வேளாளர் சங்கத்தின் தலைவர் திரு. ராதா கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு வந்திருந்தது. மதுரையிலிருந்து ஐயா திரு. நீலகண்டன் தலைமையில் ஒரு குழுவும், புதுச்சேரியிலிருந்து சாமி வீரப்பிள்ளை – யினரும், தமிழ் நாடு இளைஞர் படையினர் பெருமளவில் பங்கெடுத்து சிறப்பித்தனர்.
கோவையிலிருந்து நான்கு திசை வேளாள சங்கத்தின் செயலாளர் திரு. கார்வேந்தன் அவர்களும், கொங்கு முன்னணியின் சங்கத்தினர்களும் பங்கெடுத்து சிறப்பித்திருந்தனர். கன்னியாகுமாரியிலிருந்து நாஞ்சில் நாட்டு வெள்ளார்களும் பங்கெடுத்திருந்தனர். பழனியிலிருந்து பாண்டிய வேளாளர் சங்கத்தினரும், மதுரை வழக்குரைஞர் திரு. செல்வம் பிள்ளை அவர்கள் குழுவும் வருகை தந்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு வேளாள அமைப்பினர் தொலைப்பேசியில் தாங்களால் வர இயலாத காரணத்ததை சொல்லி வருந்தினர்.
செய்தியாளர்கள் பெருமளவில் பங்கு கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வேளாளர்களின் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.