கல்வெட்டு படி இந்த தானம் செய்தவர்கள் – முதலியார், தேவர், பிள்ளை
இந்த பட்டங்கள் எல்லாம் ஒரு நபரையே குறிக்க பயன்பட்டு இருக்கிறது.
இதில் முதலிகளில் – அதிகாரிகளில், பெருமாள் பிளை தேவன் என்பது பெயர். பரை முதலிகளுக்கும் தேவர் பிள்ளை என்று அழைக்கப்படுவதே பழைய மரபாகவும் இருந்திருக்கிறது. பெருமாள் சுந்தரபாண்டிய தேவரின் முதலிகளான (அதிகாரிகள்) பொன் பற்றி ஊரைச் சேர்ந்த சீராம தேவர் மற்றும் சேதிராய தேவர் ஆகிய இருவரின் காரியத்தை ஆற்றக்கூடிய கடமையுடையவனான ஆதனூர் ஊரைச் சேர்ந்த பெருமாள் பிள்ளையான வில்லவராயன் என்பவன் திருமஞ்சன கிணறு வெட்டுவித்து அளித்ததைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.