தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. கந்தசாமி அதியமான், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை முகப்பேரில் அவ்வமைப்பின் தலையகத்தை வைத்து நடத்தி வருகிறார்.
தமிழர் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து வருவதை நாமும் அறிவோம்.
அன்மையில் அவர் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில், அவர் பள்ளர்களின் பெயர் மாற்று கோரிக்கையை புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டு, தவறை சுட்டிக் காட்டியுள்ளார்.
அவரது காணொலியில், பள்ளர்களின் கோரிக்கையானது, வேளாளரின் சைவ மடங்களுக்கு எதிராக செயலாற்றவே இந்திய பா.ச.கட்சி இந்துத்துவாவை புகுத்தி, அதன் மூலம் மடங்களை ஆக்கரிமிப்பு செய்ய திட்டமிடுவதாக சொல்லியுள்ளார்.
மேலும், அவர் 2019-ம் ஆண்டின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, பள்ளர்களிடம் வெறும் 1.95% சதம் தமிழகத்தில் நிலங்கள் உள்ளதாகவும், வெறும் 2% மட்டுமே நில உடைமையாளர்களாகவும் உள்ளதாக புள்ளி விபரங்களோடு சொல்லியுள்ளார்.
பொய்யான தகவல்களை பள்ளர்கள் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அவற்றை மாற்றி கொள்ளாவிட்டால், பின்னாளில் தமிழினத்திற்கே பெரியதொரு சிக்கலாக முடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
அவரது, மேலே உள்ள காணொலியை கேளுங்கள்….
- வேளாளர் மையம்