“கோரிக்கை” என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரைக்கு விளக்கம் கேட்டு வேளாளர்களின் கேள்விகள்!

0
1119
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

பெறுநர்

செய்தி ஆசிரியர்
தினமலர்
சென்னை

ஐயா வணக்கம்!!

பொருள் : 27/09/2020 ஞாயிறு அன்று வெளிவந்த உங்களின் பத்திரிக்கையில் ”கோரிக்கை” என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரையின் விளக்கம் கேட்டு வேளாளர்களின் கேள்விகள்:

  1. எந்த ஒரு அரசு ஆவணமின்றி எப்படி நீங்கள் “தேவேந்திர குல வேளாளர்கள்“ (தே.கு.வே) என்று எழுதினீர்கள்?
  2. ஆறு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து என்று எழுதி உள்ளீர்கள் அதில் கடையர் மக்கள் அவர்களை இதில் சேர்க்க கூடாது என்று நீதிமன்றத்தை அணுகி வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது உங்களுக்கு தெரியுமா ?
  3. அது போல, #வாதிரியர்#
    மக்கள் தங்களை வேறு சமுதாயமாக அடையாளம் கண்டு அவர்களை தே.கு.வே என சேர்க்க கூடாது என்று ஹன்ஸ்ராஜ் வர்மா கமிசினில் மனு கொடுத்துள்ளார்கள். அது உங்களுக்கு தெரியுமா?
  4. தொல்காப்பியத்தில் மருத நில மக்களாக அறியப்பட்ட என்ற உங்கள் கட்டுரைக்கு ஆதாரம் உள்ளதா?
  5. பள்ளர் சமுதாய மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதாக யாரோ எழுதிய கதைக்கு நீங்கள் உயிரூட்ட முயற்சி செய்வது ஏன்? ஆதாரம் உள்ளதா?
  6. தமிழகத்தின் மிக மூத்த குடியாம் “வேளாளர்கள்” கவுண்டர்/பிள்ளை/முதலியார்கள் பட்டம் கொண்டவர்கள் இந்த கோரிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.உங்களுக்கு தெரியாதா?
  7. பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வேளாளர்களின் பெயரை மற்றொரு சமுதாயத்திற்கு வழங்கினால் தமிழ் குடிகளுக்குள் ஏற்படும் குளறுபடிகள் உருவாக்கி சாதிய கலவரம் செய்ய துடிப்பதேன்?
  8. செய்தி ஊடகம் உள்ளதை உள்ளபடி சொல்வதற்குத்தானே அன்று இல்லாததை உருவாக்க அல்ல என்று உங்களுக்கு தெரியாதா?
  9. முதலில் அந்த சமுதாயத்தில் உள்ள மக்கள் உண்மையிலே இந்த கோரிக்கையை விரும்புகின்றனர் அல்லது சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக கட்டமைப்படுகிறதா?
  10. தேவேந்திர குலம் என்ற உட்பிரிவு ஏற்கனவே கொங்கு வேளாளர்களின் உட்பிரிவில் உள்ளதை நீங்கள் அறிவீர்களா?

இது போக அரசு அனுமதி இல்லாமல்
அவர்கள் வெளிப்படையாக
போர்டு வைத்து வருவதை நீங்கள் எவ்வாறு
பார்க்கிறீர்கள்????

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
என்பதுதான்
பத்திரிக்கை தர்மம், இந்து தர்மம் என்றால் அத்தர்மத்தை நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக
மீறலாமா???

இந்து மக்களிடையே
பிரிவினை உண்டாக்க நினைக்கும் உங்கள்
நோக்கத்தின் காரணம் என்ன??

வேண்டும் என்றே நீங்கள் தானாகவே முடிவு செய்து விட்டு
பத்திரிக்கையில் ஆயிரம் பேர் படிக்க போடுவது ,

ஒருபக்க கருத்தை கேட்டுக் கொணடு மற்றொருவர் சொல்வதை கேட்பதே இல்லை என்று
இருப்பது எந்த ஊர்
ஊடக தர்மம்???

எங்கள் அடையாளம் அழிந்து விடும்
என நாங்கள் கேட்பது தவறா???

அவர்கள் தான்
அகில இந்திய குர்மி பட்டேல்
சங்கத்தில் இணைந்து
எங்கள் குடிகள் அவர்கள் என்று கூறுவதால்

நீங்கள்
அவர்களை

குர்மி
பட்டேல்

என
இந்திய அளவில் பெயர்
வைக்க கூறலாமே??

அதற்கு அவர்களும்
இவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் அல்லவா??

மேலும் எங்கள் வேளாளர் கல்வெட்டுக்களை திருடி

சேரர்
சோழர்
பாண்டியர்
பல்லவர்
வேளிர்

என அனைத்து மன்னர் பரம்பரையினர் என பரப்புரை
செய்து போலியாக வரலாறு
எழுதி வருகின்றனர்

இதனால்
மற்ற
தமிழ்க்குடி
சமூகங்களான

முக்குலத்தோர்
தேவர் (கள்ளர், மறவர் ,அகமுடையார்)

வன்னியர்

பறையர்

மேல் கேட்கப்பட்ட கேள்விகள் எந்த நிலையிலும் ஆதிக்க மனப்பான்மையில் எழுதப்பட்டது அல்ல. வேளாளர்களின் உரிமை பற்றிய கேள்விகளே என்று உணர்விர்களா? உங்கள் நடுநிலையை நீங்கள் எழுதும் பதிலின் அடிப்படையில் நாங்கள் வேளாளர்களிடம் கொண்டு சேர்ப்போம்.

தங்கள் விடைகளுக்கு காத்திருக்கிறோம்.

நன்றி

வேளாளர் மையத்திற்காக,

(அக்னி சுப்ரமணியம்)
ஒருங்கிணைப்பாளர்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: