டூபாகூர் வழக்குரைஞர் கரூர் இராஜேந்திரன் மற்றும் பச்சையப்பன் என்ற இந்த இரண்டு பேர் பதிவு செய்யப்பட்ட வழக்குரைஞர்கள், கரூர் லாயர்ஸ் என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் கொங்கு கவுண்டர் வீட்டு பெண்களை தகாத வார்த்தைகளில் பதிவு செய்தனர்.
இதை கண்டிக்கும் வகையில், கதிர்வேல் என்ற கொங்கு வழக்குரைஞர், சென்ற 10ம் தேதி ஆகஸ்ட் மாதம் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்த செய்தியை நாம் ஏற்கெனவே வெளியிட்டோம்.
இதற்கடுத்து, அந்த வாட்ஸ் ஆப் குழுவின் நிர்வாகியான டூபாகூர் வழக்குரைஞர் கரூர் இராஜேந்திரன் கடந்த 19ம் தேதி தனது அலுவலகத்தில் சிலர் தாக்கியதாக சொல்லி உடைந்த நகத்தை காட்டி புகைப்படம் வெளியிட்டு தனக்கு அனுதாபம் தேடினார்.
ஆனால், பொய்யான இம்மாதிரியான நபர்களை விசாரணை மேற்கொண்ட, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுண்சில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பொய்யான செய்தியை பரப்பிய பச்சையப்பன் மற்றும் கரூர் இராஜேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, இனி இவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்காட தடை விதிக்கப்பட்டதாக இன்று (29.08.2020) சுற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றிக்கையின் நகல்களை இந்திய உச்ச நீதிமன்றம், உயர் நீதி மன்றம் என பலருக்கும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்த வழக்குரைஞர்கள் இனி எந்த நீதிமன்றத்திலும் வழக்காட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆமா, இந்த டூபாகூர் வழக்குரைஞர் கரூர் இராஜேந்திரன் எப்போது, இதுவரை வழக்காடி இருக்கிறார்.
- வேளாளர் மையம்