கேரள மேனாள் அமைச்சர் திரு. சங்கரநாராயணன் பிள்ளை, மள்ளர்கள் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொலி!
கேரளா வாழ் வேளாளர்
கேரளா வாழ் வெள்ளாள / வேளாளர்கள் எல்லாம், கேரளா வெள்ளாள மகாசபை (KVMS) கீழ் வருகிறார்கள்.
KVMS பதிவு எண் 1/1959. உடன் திருவாங்கூர் நிறுவனங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் வெள்ளாள சமுதாயத்தின் மக்கள் தொகை பதினெட்டு லட்சம்.
கேரள வேளாளரின் அடையாளமாக கொள்ளப்படுபவர் ஐயாவு பிள்ளை எனப்படும் தைக்காட்டு ஐயாவு சாமிகள் ஆவார்.
கேரளா வாழ் மலையாளம் பேசுவோர் என்போர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்த வெள்ளாள சமுதாயத்தின் சைவ வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், தென்காசி வேளாளர், கார்காத்த வேளாளர், செட்டி, கும்பகோணத்து வேளாளர், தொழு வேளாளர் நாட்டுக்கோட்டை செட்டி, முதலியார், கவுண்டர், இரணியல் செட்டி, பிள்ளை, செங்குல வேளாளர், வேளாள செட்டியார் எல்லாம் கேரள வேளாள மகா சபை கீழ் தான் வருகின்றனர்.
இதில் தமிழ்நாட்டில் இல்லாத சில பெயர்கள் உள்ளன. தென்காசி, கும்பகோணம் போன்ற பிரிவுகள் இங்கிருந்து சென்றோராக இருக்கலாம். இவர்களை தவிர பிள்ளைப் பட்டம் போட்ட மற்றவர்கள் கேரளப் பூர்வக்குடிகள் ஆவர்.
வெள்ளாளர்கள் முக்கியமாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, தொடுப்புழா-இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களிலும் வெள்ளாளர்கள் இங்கு அங்கும் காணப்படுகின்றனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளாள வம்சாவளி தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் இருந்து புலம்பெயர்தல்.