கொங்கு வேளாளரில் செம்ப குலத்தை சேர்ந்தவர்களுக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறும் கல்வெட்டு.
கல்வெட்டில் சூரிபாளையம் செம்ப கூட்டத்தார்கள் தங்களின் குலகுருவான ஞானசிவாச்சாரியாரை நம்_தெய்வம் என்றே கூறுகிறார்கள்.


இதிலிருந்து இவர்கள் எந்த அளவிற்கு குருபக்தியில் சிறந்து விளங்கினார்கள் என்பதை அறியமுடிகிறது.
இந்த கல்வெட்டில் ஆறைநாட்டை ஆர்நாடு என்று கூறுகிறது.
ஆர் என்றால் ஆத்தி என்றுபொருள், ஆத்தி மாலை சோழர்களுக்குரியது. சோழர்களின் கொங்கு நாடு குடியேற்றத்தினால் இந்த நாடு இப்பெயர்பெற்றது.
- ஆவணம்-28 (தொல்லியல் கழகம் வெளியீடு)