கொங்கு மக்கள் முன்னணியினரின் புகாரின் அடிப்படையில், தருமபுரியில் இருந்த தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகையை அன்மையில் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால் எடுக்கப்பட்டது. அது பற்றிய காணொளிகளும் வெளிவந்தது.
இந்நிலையில், ஜான் பண்டியனின் மதுரை வழக்குரைஞர் என்பவர், காவல்துறையின் துணை ஆய்வாளரை தொலைப்பேசியில் அழைத்து, மிரட்டும் தோனியில், எதற்காக பெயர் பலகையை எடுத்தீர்கள் என்பதாக கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு, அந்த துணை ஆய்வாளர், பலகையை எடுக்க சொன்ன மனுதாரரின் மனுவையே முகவரி முதற்கொண்டு அந்த வழக்குரைஞருக்கு படித்துக்காட்டியுள்ளார். இதனால், மனுதாரருக்கு மிரட்டல் வர வாய்ப்புள்ளது.
தற்போதைய செய்திப்படி, பயந்து கொண்டு, மனுவை படித்துக்காட்டிய அந்த காவல்துறையின் துணை ஆய்வாளரின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
சட்டப்படி பெயர் பலகைகள் பொதுவெளியில் வைக்கப்பட கூடாது என்பது உயர்நீதி மன்றத்தின் ஆணையுள்ள நிலையில், காவல்துறையினரை மிரட்டி பணிய வைக்கும் முயற்சி நடக்கிறது. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அதிகாரிகள் பயந்து விட மாட்டோம் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.